சிவாஜி கணேசன் இன்று இருந்திருந்தால் பிரதமர் மோடி, பா.ஜ.க'வை கண்டிப்பாக ஆதரித்திருப்பர் - பெருமையாக கூறும் ராம்குமார்

"சிவாஜி இன்று இருந்திருந்தால் கண்டிப்பாக பா.ஜ.க'வையும், மோடியையும் ஆதரித்திருப்பார்" என சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-01 13:33 GMT

"சிவாஜி இன்று இருந்திருந்தால் கண்டிப்பாக பா.ஜ.க'வையும், மோடியையும் ஆதரித்திருப்பார்" என சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கூட்டத்தில் பேசிய முத்தரசன், 'சிவாஜிகணேசன் உயிரோடு இருந்திருந்தால் அவர் வாங்கிய 'செவாலியே' பட்டத்தை திருப்பி கொடுத்து மோடிக்கு வழங்கச் சொல்லி இருப்பார்' என விமர்சனம் செய்திருந்தார்.

இதுகுறித்து பதிலடி தரும் விதமாக பேசிய சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் கூறியதாவது, 'சிவாஜி தனது உடல், பொருள், புகழ் அனைத்தையும் என்ற எதிர்பார்ப்பும் இல்லாமல் நாட்டுக்காக அர்ப்பணித்தவர். நேர்மை, திறமை, கடின உழைப்பு காரணமாக அவருக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்தது மேலும் பல விருதுகளும் கிடைத்தன எனவே அவற்றை திருப்பி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சிவாஜி இன்று இருந்திருந்தால் பிரதமர் மோடியையும், பா.ஜ.க'வையும் கண்டிப்பாக ஆதரிப்பார், உலக அரங்கில் மோடியால் பாரதம் தலைநிமிர்ந்து என்பதை கண்டு மகிழ்வார்" என கூறியதுடன் 'அரைகுறை ஞானம் ஆபத்தானது' என்று குறிப்பிட்டுள்ளார்.


Source - One India Tamil

Similar News