"எம்.ஜி.ஆரின் பரம ரசிகன் நான்" - திடீரென எம்.ஜி.ஆரை தூக்கிப்பிடித்த ஸ்டாலின்!

"எம்.ஜி.ஆரின் பரம ரசிகன் நான்" - திடீரென எம்.ஜி.ஆரை தூக்கிப்பிடித்த ஸ்டாலின்!

Update: 2021-01-19 09:18 GMT

தி.மு.க தலைவர் ஸ்டாலினின் பிரச்சார விஷயங்கள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகின்றன. இந்துக்களை வஞ்சித்துவிட்டு திடீரென 4 நாட்களுக்கு முன் "தி.மு.க இந்துக்களுக்கு எதிரி அல்ல, என் மனைவி போகாம கோவிலே கிடையாது" என்றார். தற்பொழுது கமல் முதல் அ.தி.மு.கவின் எம்.ஜி.ஆர் பற்றிய பிரச்சாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளதையடுத்து "நான் எம்.ஜி.ஆரின் பரம ரசிகன்" என எம்.ஜி.ஆர் பிரச்சார களத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினும் குதித்துள்ளார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதிக்குட்பட்ட குரும்பப்பட்டி ஊராட்சியில் தி.மு.க சார்பில் நடத்தப்பெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பேசிய அவர், "நான் எம்.ஜி.ஆரின் பரம ரசிகன். அவரது திரைப்படம் வெளிவந்தால் பள்ளியைப் புறக்கணித்துவிட்டு அந்தத் திரைப்படத்திற்குச் செல்லக் கூடியவன் நான். தலைவர் கலைஞரால்தான் எம்.ஜி.ஆர்  திரைப்படத்துறையில் முன்னேறினார். எப்படி சிவாஜி கணேசனைப் 'பராசக்தி' திரைப்படத்தின் மூலமாகக் கதாநாயகன் ஆக்கினாரோ, அதேபோல், 'ராஜகுமாரி', 'மருதநாட்டு இளவரசி' என்று தன்னுடைய திரைப்படங்களில் எம்.ஜி.ஆரை நடிக்க வைத்து, 'மந்திரிகுமாரி' திரைப்படத்தின் மூலமாகப் பெரிய கதாநாயகனாக உருவாக்கித் தந்தார். இதெல்லாம் வரலாறு. இது முதல்வர் பழனிசாமிக்குத் தெரியாது.

தலைவர் கலைஞர் பெயரைச் சட்டப்பேரவையில் சொன்னவரிடம், எனக்குத் தலைவர் கலைஞர்தான் என்று சொன்னவர், எம்.ஜி.ஆர். இதெல்லாம் வரலாறு. அந்த அளவிற்குத் தலைவர் கலைஞர் மீது பற்று கொண்டவர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒன்றுகூடி தலைவர் கலைஞரை முதல்வராகத் தேர்ந்தெடுத்தபோது அவரும் ஆதரித்தார்" என திடீரென எம்.ஜி.ஆர் புகழ் பாடினார்.

ஆனால் கருணாநிதியின் ஊழல் பொறுக்க முடியாமல்தான் எம்.ஜி.ஆர் வெளிவந்து அ.தி.மு.க என்ற கட்சியை துவங்க இறக்கும் தருவாயில் வரை கருணாநிதியை முதல்வர் ஆகாமல் பார்த்துக்கொண்டார் என்ற வரலாறெல்லாம் ஸ்டாலினுக்கு தெரியாதா? இவர் எடப்பாடி'க்கு கிளாஸ் எடுக்க துவங்கிவிட்டார் என எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கேட்க துவங்கிவிட்டனர்

Similar News