கேமரா முன்பு மட்டும் சமூக நீதியை வழங்கும் தி.மு.க - அண்ணாமலை
கேமராவிற்கு முன் மட்டும் தான் சமூக நீதி வழங்குகிறது திமுக என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.;
தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் கேமராவிற்கு முன்பு மட்டும் தான் சமூக நீதி நிலைநாட்டப்பட்டு வருகின்றது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகி இருக்கின்றது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக ட்விட்டர் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டு இருக்கிறார் திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் திமுக எம்பி கதிர் ஆனந்த் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பட்டியலின பெண் தலைவருக்கு அவமரியாதை நிகழ்ந்ததை குறிப்பிடுகிறார்.
பட்டியலிடப் பெண் தலைவருக்கு அவமரியாதை செய்த தி.மு.கவின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலான பிறகு, செய்தியாளர்கள் கூடிய இடத்தில் வாக்குவாதம் முற்றியதன் காரணமாக வெறும் கண்துடைப்பிற்காக அவர் மேடையில் அமர வைத்து கேமராவிற்கு முன் தி.மு.க சமூகநீதியை நிலைநாட்டி உள்ளது. எனவே இதன் காரணமாக தான் கேமராக்களுக்கு முன்பு மட்டும் சமூக நீதியை திமுக நிலைநாட்டியதாக அண்ணாமலை அவர்கள் குற்றச்சாட்டு இருக்கிறார்.
பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூட பட்டியலிடத்தை சேர்ந்த தலைவர்கள் தேசிய கொடியை ஏற்ற அனுமதி மறுக்கப்பட்ட நிகழ்வு பல்வேறு இடங்களில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அந்த வகையில் தற்போது பட்டியில் இனப்பெண்ணின் அவமரியாதை செய்தது தி.மு.கவின் வேலையாக இருந்து வருகிறது.இங்கு எப்படி சமூகநீதி நிலை நாட்டப்படும் என்பது தெரியவில்லை.
Input & Image courtesy: News