மூன்று மாதங்களில் தி.மு.க. தன்னை மாற்றிக் கொள்ளும் ! - பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை!
எதிர்க்கட்சியாக இருந்தபோது மத்திய அரசை எதிர்த்த திமுகவினர் தற்போது புரிந்து கொண்டு செயல்பட்டு வருவதை போன்று இன்னும் 3 மாதங்களில் வேளாண் சட்டம் மற்றும் நீட் தேர்வு விஷயங்களில் தங்களை மாற்றிக் கொள்ளும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.;
எதிர்க்கட்சியாக இருந்தபோது மத்திய அரசை எதிர்த்த திமுகவினர் தற்போது புரிந்து கொண்டு செயல்பட்டு வருவதை போன்று இன்னும் 3 மாதங்களில் வேளாண் சட்டம் மற்றும் நீட் தேர்வு விஷயங்களில் தங்களை மாற்றிக் கொள்ளும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்து 10 ஆண்டுகாலம் மத்திய அரசின் திட்டங்களை கண்மூடித்தனமாக எதிர்த்தனர். தமிழகத்தில் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவிற்காக பிரதமர் மோடி வந்தபோது, கோ பேக் மோடி என்று டிரெண்ட் செய்தனர் திமுகவினர்.
இன்று அந்த திட்டம் தமிழகத்திற்கு கிடைத்தபோது வரப்பிரசாதம் என்று குறிப்பிட்டு அத்திட்டத்தின் வாயிலாக 2000 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அது போன்று தடுப்பூசி விஷயங்களிலும் திமுகவினர் விமர்சனம் செய்தனர். ஆனால் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தேவைக்கு அதிகமாக தடுப்பூசியை மத்திய அரசு வழங்கியுள்ளது எனக் கூறினார்.
எனவே முன்னர் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு திமுகவினர் மத்திய அரசை விமர்சனம் செய்து வந்தனர். ஆனால் வருகின்ற 3 மாதங்களில் வேளாண் சட்டம் மற்றும் நீட் தேர்வு விஷயங்களில் தங்களை மாற்றிக்கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Dinamalar
https://www.dinamalar.com/news_detail.asp?id=2835786