தி.மு.க. பிரமுகர் நிறுவனம், வீட்டில் ஐ.டி. ரெய்டு: திடீர் ரெய்டுக்கான காரணம் என்ன!
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு மாசப்பேட்டையில் உள்ள சாரதியின் வீடு மற்றும் அலுவலகங்களில் திடீரென்று நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனையால் திமுகவினரிடையே பீதியை கிளப்பியுள்ளது. ஆற்காட்டைச் சேர்ந்தவர் சாரதி, இவர் பல்வேறு தொழில்களை நடத்தி வருகின்றார். இவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிகாலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். சாரதி, துணிநூல்துறை அமைச்சர் காந்தியுடன் மிகவும் நெருக்கமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆற்காடு மாசப்பேட்டையில் அமைந்துள்ள சாரதியின் வீடு மற்றும் அவரது அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருவது, திமுகவினரிடையே பீதியை கிளப்பியுள்ளது. இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கிடைக்கபெற்றிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் ரெய்டு நடத்தி வரும் நிலையில் தற்போது திமுகவினர் வீடுகளில் திடீரென்று நடைபெறுகிறது.
இந்த சோதனை ஏன் நடைபெறுகிறது என்ற தகவலும் கிடைத்துள்ளது. அதாவது முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சமயத்தில் வீரமணியுடன் தொழிலதிபர் சாரதி நெருக்கம் காட்டியுள்ளார். இதன் காரணமாக சோதனை லிஸ்டில் சாரதியின் பெயரும் இடம்பெற காரணம் என கூறப்படுகிறது.
Source, Image Courtesy: Vikatan