'இந்திய நாடு மக்களால் உருவாக்கப்பட்டது, அரசுகளால் உருவாக்கப்படவில்லை' - ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய தேசிய ஒற்றுமை

'இந்திய நாடு மக்களால் உருவாக்கப்பட்டது, அரசுகளால் உருவாக்கப்படவில்லை, 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற இலக்குடன் தற்போது பயணித்து வருகிறோம்' என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.

Update: 2022-06-10 13:02 GMT

'இந்திய நாடு மக்களால் உருவாக்கப்பட்டது, அரசுகளால் உருவாக்கப்படவில்லை, 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற இலக்குடன் தற்போது பயணித்து வருகிறோம்' என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.

சென்னை தரமணியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் 58-வது நிறுவன நாள் விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, '2014 வரை நாட்டில் 400 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்தது, ஆனால் இன்று 70,000 நிறுவனங்கள் உருவாகியுள்ளது' என்றார்.

மேலும் பேசிய அவர், 'அடிப்படை வசதிகள், தொழில் துறை என பல துறைகளில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. 2047'ல் பாரதம் உலகத் தலைவராக மாறவேண்டும்' என்றார்.

மேலும், 'இந்திய நாடு மக்களால் உருவாக்கப்பட்டது, அரசுகளால் உருவாக்கப்படவில்லை. 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற இலக்குடன் தற்போது பயணித்து வருகிறோம். இந்த இலக்கு ஒவ்வொரு இந்தியனின் ஒத்துழைப்புடன் தான் நடக்கும் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' எல்லோருடனும் எல்லோருக்காகவும் என தமிழில் கூறினார்.


Source - News 7 Tamil

Similar News