உண்டியல் பணத்தில் பட்டர் முறுக்கு, இன்னோவா காரு! கொழிக்கும் அறநிலையத்துறை அதிகாரிகள் - ஆதாரங்களுடன் போட்டுத்தாக்கிய அண்ணாமலை

அறநிலையத்துறை பக்தர்களின் காசை முழுங்கி ஏப்பம் விடும் துறையாக இருக்கிறது என இத்தனைநாள் பக்தர்கள் கூறிவந்த நிலையில் முதன்முதலாக ஒரு அரசியல் கட்சி

Update: 2023-01-22 08:38 GMT

அறநிலையத்துறை பக்தர்களின் காசை முழுங்கி ஏப்பம் விடும் துறையாக இருக்கிறது என இத்தனைநாள் பக்தர்கள் கூறிவந்த நிலையில் முதன்முதலாக ஒரு அரசியல் கட்சி அறநிலையத்துறையின் அட்ராசிட்டிகளை அம்பலப்படுத்தி போராட்டத்தில் குதித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் பாஜகவினர் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து அறநிலையத்துறையிடம் இருந்து கோவில்களை மீட்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கூட்டத்தில் அறநிலையத்துறை பக்தர்கள் காசை எப்படி எல்லாம் முழுங்கி ஏப்பம் விடுகிறது, கோவில் சொத்துக்கள் எப்படி பராமரிக்காமல் அழிக்கப்படுகின்றன, ஆளும் திமுக அரசு கோவிலை எப்படி தனது அரசியலுக்காக பயன்படுத்துகிறது என ஆதாரங்களுடன் அண்ணாமலை விளக்கினார்.

இந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது, 'அறநிலையத்துறை முற்றிலும் பக்தர்கள் காணிக்கை பணத்தை சுரண்டும் துறையாக இருக்கிறது. அறநிலையத்துறை வசமுள்ளள திருக்கோவிலின் மரபுகள் மீறப்படுகிறது. கணக்கில்லாமல் கோவில்கள் இடிக்கப்படுகிறது. புராதான கோவில்களின் நகைகள் உருக்கப்படுகிறது. இதெல்லாம் HR & CE எனப்படும் அறநிலையத்துறை வசம் நம் கோவில்கள் உள்ளதால் நடக்கும் அக்கிரமங்களாகும்

கடந்த சில நாட்கள் முன்பு கபாலீஸ்வரர் திருக்கோவிலில் 270 அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டம் என்ற பெயரில் ஒரு கூட்டம் நடத்தினார்கள், அதில் கின்லி வாட்டர் பாட்டில், பட்டர் முறுக்கு, ஸ்பெஷல் மிக்ஸர், ட்ரய் குலாப் ஜாமூன், நல்ல ஹோட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட சாப்பாடு என கோவில் பணத்தில் சாப்பிட்டுள்ளார்கள். இதற்கான செலவு எங்கிருந்து எடுத்துள்ளார்கள் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பார்த்தால் கோவில் உண்டியலில் பக்தர்கள் உழைத்து கொண்டு வந்து போடும் பணத்தில் இருந்து எடுத்துள்ளார்கள் என தகவல் கிடைத்துள்ளது. இதேபோல் வடபழனி கோவில் உண்டியல் பணத்திலும் அதிகாரிகள் கூட்டம் போடுகிறேன் என்ற கணக்கு காட்டியுள்ளார்கள்.

இதுமட்டுமில்லாமல் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் உண்டியல் பணத்தில் அறநிலையத்துறை அதிகாரி அறையில் டாய்லெட் சீட் மாத்த 12 ஆயிரத்து 400 ரூபாய் கணக்கு காட்டியுள்ளது அறநிலையத்துறை இது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அம்பலமாகியுள்ளது.

மற்றொரு சம்பவமாக திருச்செந்தூர் முருகன் கோவிலில் நமக்கு எல்லாம் தெரியும் எனது உறவினர்கள் உங்கள் உறவினர்கள், தெரிந்தவர்கள் எல்லோரும் கடவுளுக்கு வேண்டிக்கொண்டு பசு மாட்டை கொடுப்போம்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்த தணிக்கை அறிக்கையில் ஒரு பத்தியை படித்து பார்த்தால் 5 ஆயிரத்து 309 மாட்டை காணவில்லை. அதாவது பக்தர்கள் (மாட்டை) கொடுத்த பதிவுகள் உள்ளது. யார் ஏலம் விட்டது. யார் அந்த மாட்டை சைடில் அந்த மாட்டை திருடி உங்கள் உறவினர், திமுக கிளைச்செயலாளருக்கெல்லாம் மாட்டை கொடுத்து விற்றுவிட்டீர்களா? 5 ஆயிரத்து 309 மாடுகள் திருச்செந்தூர் கோவிலில் நடத்தப்பட்ட தணிக்கையில் மாட்டை காணவில்லை. 'வடிவேலு கிணற்றை காணோம் என்று சொன்னது போல்' திருச்செந்தூர் கோவிலில் 5 ஆயிரத்து 309 மாட்டை காணவில்லை என அண்ணாமலை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கூட்டத்தில் தகுந்த ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார்.

மேலும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துறைமுகம் பகுதியில் சொந்தமாக பில்டிங் வைத்துள்ளார் அதே பகுதியில் சொந்த பில்டிங்கிற்கு வாங்கும் வாடகையை விட கோவில் இடத்தில் இருக்கும் வாடகை கம்மியாக வாங்கப்படுகிறது, அமைச்சர் சொந்த இடம் என்றால் ஒரு நியாயம் கோவில் இடம் என்றால் ஒரு நியாயமா? என சேகர்பாபுவுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

பக்தர்களின் காணிக்கை உண்டியல் பணங்கள் சுரண்டப்படுகிறது. பூஜை புனஷ்காரங்கள் நிறுத்தப்படுகிறது. பக்தர்கள் வருகைகள் தவிர்க்கப்படுகிறது. கோவில் கும்பாபிஷேகங்கள் மறுக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது எந்த தைரியத்தில் இந்து சமய அறநிலையத்துறை என்ற துறையை வைத்துக்கொண்டு வெள்ளை, காவி உடையுடன் அமைச்சர் காலை முதல் மாலை வரை சுற்றிக்கொண்டுள்ளார்' என்றார் அண்ணாமலை

இறுதியாக தமிழகத்தில் அனைத்து கோவில்களில் இருந்தும் அறநிலையத்துறை வெளியேறவேண்டும் சென்னை காளிகாம்பாள் கோவிலைபோல் தமிழகத்தின் அனைத்து கோவில்களும் நிர்வகிக்கப்படவேண்டும் என அண்ணாமலை ஆதாரங்களுடன் விளக்கினார். 

Similar News