சி.எஸ்.கே. வெற்றிபெற குஜராத்தை சேர்ந்த பா.ஜ.க. கார்யகர்த்தா ஜடேஜாவே காரணம்: அண்ணாமலை!
தழிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ள குஜராத் அணியை நாம் கொண்டாட வேண்டும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.;
தழிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ள குஜராத் அணியை நாம் கொண்டாட வேண்டும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியானது மழை காரணமாக நேற்று (மே 29) நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இந்த வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வரும் நிலையில் தமிழக அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் அதிகளவில் குஜராத் அணியில் உள்ளனர். எனவே நாம் அந்த அணியை கொண்டாட வேண்டும் என்றார்.
மேலும், தோனிக்காகவும் சி.எஸ்.கே. அணியை கொண்டாடுவோம் என்றார். மேலும் அவர் கூறும்போது, சி.எஸ்.கே. அணியை வெற்றி பெறச் செய்தது குஜராத்தை சேர்ந்த பா.ஜ.க. கார்யகர்த்தா ஜடேஜாவே காரணம். அவரது மனைவி பா.ஜ.க. எம்.எல்.ஏ.,வாக உள்ளார். எனவே தமிழக வீரர்களே இல்லாத சென்னை அணி அதிகமான தமிழக வீரர்களை கொண்டிருக்கும் குஜராத் அணியை கொண்டாட வேண்டும் எனக் குறிப்பிட்டார். இவரது பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.