தி.மு.க வாக்காளர்களை தூக்குகிறார்கள் என பதறும் செந்தில் பாலாஜி - தோல்வி பயமா தி.மு.கவிற்கு?

தி.மு.க வாக்காளர்களை தூக்குகிறார்கள் என பதறும் செந்தில் பாலாஜி - தோல்வி பயமா தி.மு.கவிற்கு?

Update: 2020-11-09 18:15 GMT

வரும் 2021 சட்டமன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் தங்களது வேலைகளில் மும்முரமாக இருக்க தி.மு.க'வோ இப்பொழுதே தோல்விக்கான காரணங்களை அடுக்க துவங்கியுள்றது. நேற்று தி.மு.க'வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி "தி.மு.க உறுப்பினர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குகின்றனர்" என்று வித்தியாச புகார் அளித்த நிலையில். இன்று "கரூர் மாவட்ட ஆட்சியர் ஆளுங்கட்சிக்கு சார்பாக வரும் தேர்தலில் பணியாற்ற வந்தமாதிரி தெரிகிறது" என செந்தில் பாலாஜி புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, "கரூரில் உள்ள 1,031 பூத்களிலும் ஆளுங்கட்சியினர், தி.மு.க வாக்காளர்களை சம்பந்தப்பட்ட தொகுதியைவிட்டு நீக்க முயற்சி பண்றாங்க. கரூர் தொகுதியில் உள்ள ஒரு பூத்தில் மட்டும் 207 தி.மு.க சார்புள்ள வாக்காளர்களை நீக்க முயற்சி பண்றாங்க. அந்த பூத்தில் நிரந்தர முகவரிகளில், சொந்த வீடுகளில் பல வருடங்களாக குடியிருக்கும், உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும் அவர்களை நீக்குவதற்காக, வாக்காளர் பட்டியலில் தொடர் எண்ணை குறியிட்டு, மாவட்ட ஆட்சியர் மலர்விழிக்கு ஆளுங்கட்சியினர் பட்டியல் வழங்கியிருக்கிறார்கள்" என ஆட்சியர் மீதே புகார் அளித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், "கரூர் சட்டமன்றத் தொகுதியில் மட்டும், தி.மு.கவுக்கு சார்பான 25,000 வாக்காளர்களை நீக்குவதுதான் அவர்களின் இலக்கு. அதேநேரம், வேறு தொகுதிகளைச் சேர்ந்த 10,000 அ.தி.மு.க வாக்காளர்களை கரூர் சட்டமன்றத் தொகுதியில் சேர்க்க நினைக்கிறார்கள். வேறு பகுதிகளில் இருந்து, கரூரில் உள்ள ஒரு கம்பெனி ஒன்றில் பணிபுரியும் 20 பேர்களை, அந்த கம்பெனி முகவரியை வைத்து, கரூர் வாக்காளர்களாக சேர்த்திருக்கிறார்கள். ஆனால், அ.தி.மு.க-வினரின் இந்த முயற்சியை நாங்கள் செயல்படுத்தவிடமாட்டோம்" என கொந்தளித்துள்ளார்.

எவ்வாறு இருந்தாலும் தேர்தலுக்கு முன் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம் மற்றும் தேர்தல் அலுவலர்களின் பட்டியல் வெளியீடு என தேர்தல் கமிஷன் வாக்காளர்களை பட்டியலில் இணைத்தல் மற்றும் நீக்குதல் போன்னறவற்றை செய்துவிடுவர்.
 
இருப்பினும் தி.மு.க'வினர் கூறுவது போல் தி.மு.க வாக்காளர்களை நீக்கினாலும் பட்டியலில் பெயர் இல்லை என சம்மந்தப்பட்டவர்களே முகாமிலோ அல்லது தங்கள் பகுதி வாக்காளர் சரிபார்ப்பு மையத்திலோ சென்று சரிசெய்து கொள்ளலாம். இது இவ்வாறு இருக்க தி.மு.க வாக்காளர்களை பட்டியலில் இருந்து தூக்குகிறார்கள் என பதறுவது தி.மு.க'வினர் தோல்விக்கு இப்பொழுதே காரணம் தேடுவது போல் உள்ளது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Similar News