எல்.முருகன் செல்லும் வழியில் போராடிய தி.மு.க மற்றும் வி.சி.கவினர் - பா.ஜ.கவின் வளர்ச்சியில் கதிகலங்கி நிற்பது காரணமா?
எல்.முருகன் செல்லும் வழியில் போராடிய தி.மு.க மற்றும் வி.சி.கவினர் - பா.ஜ.கவின் வளர்ச்சியில் கதிகலங்கி நிற்பது காரணமா?
தமிழகத்தில் பா.ஜ.க வளர்ந்து வருவதை தி.மு.க'வும் அதன் கூட்டணி கட்சியும் பொறாமை கொண்டு வருகின்றனர். இதனை அவ்வபோது வார்த்தைகளால் வெளிப்படுத்திய நிலையில் தற்பொழுது களத்திலும் பா.ஜ.க'வின் வளர்ச்சியை கண்டு வெறுப்படைந்து போராடி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று தமிழக பா.ஜ.க'வின் தலைவர் எல்.முருகன் மதுரையில் பா.ஜ.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவிற்கு கலந்துகொள்ளவிருந்த நிலையில் அவர் செல்லும் வழியில் மறியலுடன் கூடிய போராட்டத்தை முன்னெடுத்தது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருப்பாலை மந்தை திடலில் பா.ஜ.க'வினர் சார்பில் "நம்ம ஊர் தாமரை பொங்கல்" விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க சென்ற தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வி.சி.க மற்றும் தி.மு.க'வினர் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்ற அந்த விழாவில் கலந்து கொள்ள அவர் மாட்டு வண்டியில் வந்தார். அவர் வரும் வழியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் தி.மு.க'வினர் திரண்டு எல்.முருகனை கடுமையாக விமர்சித்து முழக்கம் எழுப்பினர்.
பிறகு அங்கு வந்த போலீசார் அவர்களை கட்டுப்படுத்தினர். பின்னர் அங்கிருந்து பழமை வாய்ந்த பள்ளிவாசல் ஒன்றின் வழியாக எல்.முருகன் மாட்டுவண்டியில் நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதனால் பா.ஜ.க'வினருக்கும் அப்பகுதியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, பின்னர் போலீசார் சமாதானம் செய்ததையடுத்து அவர்கள் களைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்ததால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.