ஏதே ஈரோட்டுல ஓட்டுக்கு பத்தாயிரமா? திரும்பும் திருமங்கலம் பார்முலா! - கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கும் செந்தில்பாலாஜி

ஈரோடு தேர்தலில் வாக்குக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுக்கப்போவதாக பத்திரிக்கையாளர் மணி கூறும் வீடியோ இணையங்களில் வைரலாகிறது.

Update: 2023-01-27 01:43 GMT

ஈரோடு தேர்தலில் வாக்குக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுக்கப்போவதாக பத்திரிக்கையாளர் மணி கூறும் வீடியோ இணையங்களில் வைரலாகிறது.

ஈரோடு இடைத்தேர்தலில் வாக்குக்கு 10,000 வரை போட்டியிடும் கட்சிகள் இறைக்கபோகின்றன என அதிரடி தகவல் பரவி வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்தவர் தாங்க திருமகன் ஈ.வே.ரா இவர் இப்ப அறிவிச்சுருக்க ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன், திருமகன் ஈ.வே.ரா உடல்நலக்குறைவால காலமானதுனால ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதா அறிவிக்கப்பட்டதுங்க, உடனே தேர்தல் ஆணையம் வர பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் அறிவிச்சது தேர்தல் அறிவிச்சது மட்டும் இல்லாம உடனே அந்த இடத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமலுக்கு வந்துச்சுங்க.

இந்த மாதிரி இருக்கிற நிலைமையில் இன்னும் கிட்டத்தட்ட ஒரு வருஷத்துல நாடாளுமன்ற தேர்தல் வரவேற்கும் நிலையில் இந்த ஈரோடு கிழக்கு தொகுதியோட இடைத்தேர்தல் ரொம்ப முக்கியமாகவே பார்க்கப்பட்டது, ஒரு பக்கம் ஈரோடு கிழக்கு திமுக கூட்டணியில் இருந்த தொகுதி இன்னொரு பக்கம் அதிமுகவில் இபிஎஸ்-ஓபிஎஸ் பிரச்சனையில் யார் வேட்பாளர் அறிவிக்குறதுன்ற பிரச்சினை, இன்னொரு பக்கம் பாஜக க்கு இது வரபோற நாடாளுமன்ற தேர்தலோட பலப்பரிட்சை இப்படி மூன்று மிகப்பெரிய கட்சிகளுக்கும் ஈரோடு கிழக்கு தொகுதியோட இடைத்தேர்தல் ரொம்பவே முக்கியமா பார்க்கப்பட்ட நிலையில இந்த தொகுதியில போட்டியிடும் வேட்பாளர் கண்டிப்பாக கவனம் குவிக்கிற வேட்பாளராக இருப்பாங்க என்று எதிர்பார்ப்பு நிலவி வந்துச்சு.

இப்படி தமிழக அரசியல அடுத்த ரெண்டு மூணு வருஷத்துக்கு நகர்த்தி கொண்டு போற மைப்புள்ளியா ஈரோடு இடைத்தேர்தல் மாறியிருக்கிற நேரத்துல யாருப்பா ஈரோடு தொகுதியுடைய வேட்பாளரா வருவாங்கன்னு சொல்லி எல்லாருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருந்துச்சு! இந்த நேரத்துலதான் இறந்து போன திருமகன் ஈவேரா ஓட தந்தையான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன காங்கிரஸ் ஓட தலைமை வேட்பாளரா அறிவிச்சிருக்கு. இன்னும் அதிமுக தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்படல!

இந்த நிலையில வெகு சமீபத்தில் பத்திரிக்கையாளர் மணி என்பவர் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பரபரப்பான தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதாவது ஈரோடு இடைத்தேர்தலில் வாக்குக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுக்க திமுக திட்டமிட்டு இருப்பதாகவும் அதன் பின்னரையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இருக்கிறதாகவும் சொல்லிருக்காரு.



மேலும் ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவிற்கு தோல்வி முகத்தை கொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர் அப்டின்னும் ஆனால் தோல்வியிலிருந்து தப்பித்து திமுக மிச்சமுள்ள 3 ஆண்டுகள் ஆட்சியை ஓட்டனும்ன்னு எதிர்பார்த்து வருகிறது அப்டின்னும் பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்குறாங்க.

எனவே இந்த தேர்தல் திமுகவிற்கு கண்டிப்பாக அவர்களுடைய சுயமரியாதையை காப்பாத்திக்குற தேர்தலா கண்டிப்பா இருக்கும். அதனால இந்த தேர்தல்ல எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என திமுக கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கி வருதுன்னும் அதனாலதான் தனது அமைச்சரவை முழுவதையும் ஈரோட்டில இறக்கினது மட்டுமில்லாம திமுக கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் ஈரோடு பக்கம் தேர்தல் வேலையை பார்க்க திமுக தலைமை அனுப்பி இருக்கு.

இந்த நிலையில் வாக்குக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுக்கப் போகிறார் என்ற தகவல் வேற பரவுறது ஈரோடு மக்களை ரொம்பவே எதிர்பார்க்க வைச்சுருக்கு! மத்த தொகுதி மக்களை கொஞ்சம் ஏக்கத்தோட பார்க்க வச்சுருக்கு!  


Source - One India Tamil

Similar News