போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை நிறுத்தப்பட்டதா? ஊடகங்களின் முகத்திரையை கிழித்த பா.ஜ.க.,செய்தி தொடர்பாளர் எஸ்.ஜி.சூர்யா.!

போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை நிறுத்தப்பட்டதா? ஊடகங்களின் முகத்திரையை கிழித்த பா.ஜ.க.,செய்தி தொடர்பாளர் எஸ்.ஜி.சூர்யா.!

Update: 2020-12-23 20:34 GMT

நாடு முழுவதும் பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மத்திய அரசு நிறுத்திவிட்டதாக தமிழக ஊடகங்கள் பொய் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.

பட்டியலின பழங்குடியின மாணவர்கள் 10ம் வகுப்போடு கல்வியை கைவிடும் போக்கை மாற்றும் வகையில் போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி பட்டியலின மாணவர்களின் மேல்நிலை படிப்பு மற்றும் உயர் கல்விக்கான கட்டணங்களை அரசே ஏற்கும்.

பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின்னர் பட்டியலின, பழங்குடின மாணவர்களின் கல்விச்செலவுக்காக பெரும் நிதியை ஒதுக்கி வருகிறார். இந்நிலையில், தமிழக ஊடகங்கள் பட்டியலின மாணவர்களின் போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை குறைத்து விட்டதாக பொய் பிரச்சாரத்தை முன்னெடுத்தது.

இதனை வெளிச்சம்போட்டு காட்டும் விதமாக பா.ஜ.க., செய்தித்தொடர்பாளர் எஸ்.ஜி.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 5 ஆண்டுகளில்,

பிரதமர் மோடி தலைமையிலான அரசு பட்டியலின மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கு ரூ.59,000 கோடி செலவிட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். தமிழக ஊடகங்கள் எப்போதும் திமுகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Similar News