'எங்களையெல்லாம் பதட்டமாவே வச்சுருக்கறதுக்கு பெயர்தான் திராவிட மாடலா?' - தி.மு.க அரசின் மீது கடும் கோபத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள்

'ஆசிரியரை பதற்றமாக வைப்பது தான் திராவிடம் மாடலா' என அரசு பள்ளி ஆசிரியர் கூட்டணி கேள்வி எழுப்பி உள்ளது.

Update: 2022-11-21 02:04 GMT

'ஆசிரியரை பதற்றமாக வைப்பது தான் திராவிடம் மாடலா' என அரசு பள்ளி ஆசிரியர் கூட்டணி கேள்வி எழுப்பி உள்ளது.

'பள்ளியில் ஆசிரியர்கள் ஒருவித பதட்டத்துடன் பணியாற்ற வேண்டும் என நினைப்பதுதான் திராவிட அரசியல் நோக்கமா?' என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, 'அடிப்படை வசதி இல்லாத கிராம பள்ளிகளில் ஆன்லைனில் புள்ளி விபரம் கேட்பது வாடிக்கையாகிவிட்டது. 2019 ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்து அதிமுக அரசின் தவறான நடவடிக்கை அரசு ஊழியர்களை வீறுகொண்டு எழ செய்தது. அப்போது இன்றைய முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் அளித்தார்.

ஆனால் இன்றைய நிலை ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பது கல்வித் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குழு அமைத்து பள்ளிகளை ஆய்வு செய்வதில் ஆசிரியர்களுக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை ஆனால் அவை அச்சப்படும் அளவிற்கு செயல்படுத்துவது ஏற்க முடியாது.

ஆசிரியர்கள் பதட்டத்துடன் வைத்திருக்க வேண்டும், பணியாற்ற வேண்டும் என்று நினைப்பதுதான் திராவிட மாடல் நோக்கமா என தெளிவுபடுத்த வேண்டும்' என கேள்வி எழுப்பியுள்ளார்.


Source - Dinamalar  

Similar News