'ஆதாரம் இருக்கா?' - அண்ணாமலையின் ஊழல் புகாருக்கு தி.மு.க வழக்கமான கேள்வியுடன் பதிலடி

தி.மு.க'வின் திராவிட மாடல் ஆட்சியில் லஞ்ச ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சுமத்தியதற்கு 'ஆதாரம் இருக்கா?' என தி.மு.க அமைச்சரவையிலிருந்து கிளம்பியுள்ளது.

Update: 2022-06-05 12:30 GMT

தி.மு.க'வின் திராவிட மாடல் ஆட்சியில் லஞ்ச ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சுமத்தியதற்கு 'ஆதாரம் இருக்கா?' என தி.மு.க அமைச்சரவையிலிருந்து கிளம்பியுள்ளது.

தி.மு.க'வின் ஊழல்கள் பட்டியலிடப்படும் என முன்னரே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தி.மு.க'வின் இரண்டு ஊழல்களை பட்டியலிட்டார் பத்திரிகையாளர்கள் முன்னிலையில்.

அதில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட ஊட்டச்சத்து பொருள்களில் தி.மு.க 77 கோடி அளவுக்கு ஊழல் செய்துள்ளது எனவும் பெயர் g ஸ்கொயர் என்ற நிறுவனத்தை தி.மு.க கோவையில் 122 ஏக்கருக்கான 108 நாளிலேயே பெற்றுள்ளனர் தி.மு.க'விற்கு 2g முடிவுரை எழுதியது போல் தற்போது g ஸ்கொயர் என்ன செய்யப் போகிறது என பொறுத்திருந்து பார்க்கவேண்டும் என இரண்டு ஊழல்களை பட்டியலிட்டார்.

இந்த விவகாரங்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உடனடியாக இதற்கு தி.மு.க தரப்பில் இருந்து எதிர்வினை வெளிவந்துள்ளது, 'தமிழ்நாடு அமைச்சர்கள் மீது பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறிய ஊழல் புகார்கள் பொய்யானவை, ஓடி ஒளிய மாட்டோம், அவற்றை நிரூபிக்க தயாராக உள்ளோம்' என அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.

மற்றுமொரு அமைச்சராக மா.சுப்பிரமணியன் கூறியதாவது, 'ஊழல் புகார் தெரிவித்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆதாரமில்லாமல் பேசுகிறார் எனவும், தி.மு.க மீது அண்ணாமலை கூறிய ஊழல் புகாருக்கு ஆதாரம் இருக்கா?' என்ற வழக்கமான கேள்வியை எடுத்துக் கொண்டு தி.மு.க தற்பொழுது அண்ணாமலை ஊழல் புகாரை எதிர்கொண்டுள்ளது.

Source - Dinamalar

Source - News 7


Similar News