இந்த தேர்தல் வெற்றி தேச பக்தர்களுக்கா? அல்லது தேச விரோதிகளுக்கா? கர்ஜிக்கும் எல்.முருகன்

இந்த தேர்தல் வெற்றி தேச பக்தர்களுக்கா? அல்லது தேச விரோதிகளுக்கா? கர்ஜிக்கும் எல்.முருகன்

Update: 2021-02-16 09:15 GMT

வரும் தேர்தல் தேர்தல் தேச பக்தர்களுக்கும், தேச விரோதிகளுக்கும் இடையிலான தேர்தல் என தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

1998'ம் ஆண்டு பிப்ரவரி 14'ம் தேதி கோவையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் குண்டுவெடிப்பில்  உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கோவை ஆர்.எஸ்.புரத்தில் நேற்று நடைபெற்றது. இதில், பா.ஜ.க, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு, நினைவஞ்சலி செலுத்தினர்.

அந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் பேசுகையில் கூறியதாவது, "இந்து, தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக தி.மு.க, கம்யூனிஸ்ட்கள் செயல்படுகின்றன. பிரதமரையும், இந்துகடவுள்களையும் கொச்சைப்படுத்துபவர்கள் மீது புகார்அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது தி.மு.க மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணி  ஆட்சிக் காலத்தில்தான். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கமும் அவர்கள் ஆட்சியில்தான் நடைபெற்றது. காங்கிரஸ் ஆட்சியில் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டபோது வேடிக்கை பார்த்தது தி.மு.க. எனவே, தி.மு.க மற்றும் கடவுள் மறுப்பு இயக்கமான தி.க'வின் பொய்ப் பிரச்சாரங்களை முறியடிக்க வேண்டும்" என பேசினார்.


மேலும் பேசிய அவர், "வேல் யாத்திரைக்குக் கிடைத்த ஆதரவு, ஸ்டாலினை வேல் ஏந்த வைத்திருக்கிறது. எனவே, தேர்தலுக்காக வேஷம் போட்டுள்ளவர்களின் போலி முகத்தை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தேர்தல் தேச பக்தர்களுக்கும், தேச விரோதிகளுக்கும் இடையேயான தேர்தல். இதில் தேச பக்தர்கள் ஆகிய நாம் வெல்ல வேண்டும்" என பேசினார்.

Similar News