2ஜி வழக்கின் வேகம் மற்றும் தோல்வி பயத்தால் தரமிழந்து பேசி வருகிறாரா திகார் புகழ் ஆ.ராசா?

2ஜி வழக்கின் வேகம் மற்றும் தோல்வி பயத்தால் தரமிழந்து பேசி வருகிறாரா திகார் புகழ் ஆ.ராசா?

Update: 2020-12-06 09:27 GMT

அரசியலில் வார்த்தைகள் மற்றும் பேச்சு வழக்கங்கள் மரியாதையாக இருக்க வேண்டும் ஏனெனில் ஒரு அரசியல் தலைவரின் வெற்றியை இறுதியில் வாக்கு எனும் அங்கீகாரத்தை கொண்டு மக்கள் முடிவெடுப்பார்கள் இந்த அரசியல்வாதி தேவையா? இல்லையா என! ஆனால் சமீப காலமாக தமிழக அரசியலில் மரியாதையான பேச்சு மற்றும் நாகரீகமான பேச்சு வழக்கொழிந்து விட்டது சில அரசியல்வாதிகளால் குறிப்பாக தி.மு.க'வினர் பத்து ஆண்டுகளாக அரசியலில் பதவியில் இல்லாத காரணத்தாலும் இனிமேலும் பதவிக்கு வர இயலாது என்ற காரணத்தாலும் யாராவது வந்து மைக்'கை தி.மு.க'வினர் முன் நீட்டிவிட்டால் போது தி.மு.க'வின் இயலாமையை அந்த மைக் முன் கொட்டி தீர்த்துவிடுகின்றனர். அந்த வகையில் தி.மு.க எம்.பி.யும், திகார் புகழ் அரசியல்வாதியான  ஆ.ராசா நேற்று அ.தி.மு.க தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.

கடந்த இரு தினங்கள் முன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி "2G வழக்கு முடிந்தால் ஆ.ராசா எங்கிருப்பார் என அனைவருக்கும் தெரியும்" என உண்மையை கூறினார். இது வழக்கத்திற்கு மாறான ஒன்று கிடையாது ஏனெனில் ஏற்கனவே திகார் வாசத்தை அனுபவித்தவர் ஆ.ராசா மேலும் தி.மு.க'வின் வழக்கமான செயலாகிய "தப்பு செய்தால் ஆதாரம் உண்டா" என்ற ரீதியில் வழக்கை எதிர்கொண்டு  விடுதலை ஆனவர். ஏனென்றால் தி.மு.க'விற்கு ஓர் வழக்கமுண்டு தி.மு.க மீது களங்கம் ஏற்படுத்தினால் அதனை மறுக்க மாட்டார்கள் மாறாக "ஆதாரம் இருக்கா?" என கேட்பார்கள், காரணம் சர்க்காரியா காலம் முதல் இவர்கள் திருட்டில் கவனம் செலுத்துவதை விட ஆதாரங்கள் அழிப்பதில் கவனமாக இருப்பார்கள். எனவே "ஆதாரம் இருக்கா?" என ஜம்பமாக கேட்பார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக நேற்று பேசிய ஆ.ராசா கூறியது, "நான் சவால் விட்டு மூன்று நாட்கள் ஆகி விட்டது. இன்னும் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து பதில் வரவில்லை. உங்களுக்கு அசிங்கமாக இல்லையா? நீங்கள் வகிக்கும் பொறுப்புக்கு இது அழகா? உங்காத்தா ஊழல் செய்து ஜெயிலுக்கு போனவர் என்று சொன்னேன். அரசியல் சட்டத்தை தவறாக பயன்படுத்தி படுகொலை செய்த மன்னிக்க முடியாத கொள்ளைக்காரி. 

கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்ககவே சசிகலாவை, சுதாகரனை தனது வீட்டிற்கு அழைத்து வந்து புதிய புதிய கம்பெனிகளை உருவாக்கி பல நூறு கோடி ரூபாய்களை கொள்ளையடித்தவர் ஜெயலலிதா. அரசியலில் ஜெயலலிதா இருந்தது அசிங்கம் என நான் சொல்லவில்லை. உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. இதற்கு என்ன பதில்? என நான் கேட்டேன். அப்படிப்பட்ட ஆத்தா படத்தையே தூக்கிக் கொண்டு திரிகிறாயே..? அப்படியானால் ஆத்தா மாதிரியே ஊழல் செய்வேன். ஆத்தா மாதிரியே ஊழல் செய்வேன் என்று அர்த்தமா?’’என ஆ.ராசா பேசியுள்ளார்.

தமிழக முதல்வரை நீ, வா, போ என்றும், முன்னாள் மறைந்த முதல்வரை கொள்ளைக்காரி என்றும் மரியாதை குறைவாக ஆ.ராசா பேசியது அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. மேலும் இது பற்றி விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தன. 2G வழக்கு விசாரணை வேகம் அடைந்து வருவதால் ஏற்பட்ட பயமும், திரு.ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சியை துவங்கியதால் தி.மு.க'வினருக்கு ஏற்பட்ட உதறலும் சேர்ந்து இப்படி ஆ.ராசா பேச்சில் வெளிப்படுகிறது என்ற உண்மை வெளிவந்துள்ளது.

Similar News