தி.மு.கவுடன் விஜய் தந்தை கூட்டணியா?

தி.மு.கவுடன் விஜய் தந்தை கூட்டணியா?

Update: 2020-11-12 08:53 GMT

தமிழக அரசியலில் ஏற்கனவே இருக்கும் கட்சிகளின் கள அரசியல் போதாது என புதிதாக ஓர் கட்சி உதயமாகி உள்ளது. நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர், அண்மையில் 'அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்கிற கட்சியைப் பதிவு செய்திருந்தார். இந்தக் கட்சிக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று விஜய் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஏற்கனவே ஆட்சியமைக்க யாரையாவது கூட்டணியில் சேர்க்கலாம், எப்படியாவது ஆட்சி பீடத்தில் அமரலாம் என தி.மு.க முட்டி மோதுகிறது.  இதற்கிடையில் நேற்று ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க இளைஞரணித் தலைவரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினிடம் "எஸ்.ஏ.சந்திரசேகர் ஆரம்பித்திருக்கும் கட்சியுடன் கூட்டணி வைப்பீர்களா?" என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அவர், “விஜய்யின் தந்தையிடம் தான் கேட்க வேண்டும். வரும் சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடும் தொகுதி குறித்து, தலைமைதான் முடிவு செய்யும்” என்று கூறினார்.

இன்னும் 6 மாத காலத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் வேளையில் யார், யாருடன் கூட்டணி என்பது இன்னும் முடிவாகப்படவில்லை, இந்த நிலையில் அரசியல் கட்சிகளின் கூட்டணி எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.

Similar News