இது மதமாற்றம் அல்ல, சுதந்திரத்தை தேடும் போராட்டம்- மதமாற்ற ஆதரவை நாசுக்காக வெளிப்படுத்தும் திருமாவளவன்

இது மதமாற்றம் முயற்சி அல்ல சுதந்திரத்தில் தேடும் போராட்டம் திருமாவளவன் பரபரப்பு பேச்சு.

Update: 2022-09-29 01:50 GMT

தென்னிந்திய திருச்சபை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள 24 பேராலயங்கள் உள்ளடக்கியதாக ஆகும். தென்னிந்திய திருச்சபை தனது பவள விழாவை கொண்டாடி வருகிறது. பவள விழா கொண்டாட்டத்தின் நிறைவு நிகழ்ச்சி சென்னை மாநகரத்தில் உள்ள 'இயேசு அழைக்கிறார்' தோட்ட வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.


இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் கிறிஸ்தவ நல்லெண்ணெய் இயக்கத்தின் தலைவர் இனிகோ இதயராஜ் போன்ற பலரும் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய திருமாவளவன் கருத்துக்கள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் குறிப்பாக அவர் கூறுகையில், கிறிஸ்தவம் இல்லாவிட்டால், சனாதனம் கொட்டமடிக்கும் என வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய திருச்சபையின் 75ம் ஆண்டு பவள விழா நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், இதனை தெரிவித்தார். இவருடைய இந்த ஒரு வீடியோ பதிவு சமூக வலைதளங்களில தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. குறிப்பாக கிறிஸ்தவத்தை பற்றி அவரிடம் கூறுகையில், உன்னிடம் இருப்பதை இல்லாத ஒருவருக்கு கொடு என்பதை பார்க்கிறீர்கள். இதுதான் கிறிஸ்தவம் சொல்கிறது. இந்த குணங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் இருந்தால் அது தான் சமத்துவ நாடாக அமைக்கும் என்றும் கூறியிருக்கிறார்..

Input & Image courtesy: Twitter News

Tags:    

Similar News