ராகுலை அயல்நாடு சுற்றுலா போகவிடாமல் இந்திய மண்ணில் நடக்க விட்ட பா.ஜ.க'வின் மாஸ்டர் பிளான்

ராகுல் காந்தியின் பல்டிக்கு காரணம் பாஜகவின் '144'ஆ??

Update: 2022-09-09 06:23 GMT

ராகுல் காந்தியின் பல்டிக்கு காரணம் பாஜகவின் '144'ஆ??

நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத விரக்தியில் தற்கொலை செய்துக்கொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்தினரை சந்தித்த ராகுல் காந்தி.


தமிழகத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரையின் இரண்டாவது தினமான நேற்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் தற்கொலை செய்துக் கொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்தினரை சந்தித்தார்.


ராகுலின் முகநூல் பதிவு:

"மறைந்த நீட் தேர்வாளரான அனிதாவின் தந்தை டி சண்முகம் மற்றும் அவரது சகோதரர் மணிரத்னம் ஆகியோரை இன்று சந்தித்தார். அவளுடைய கதையும், அவளுடைய குடும்பம் அனுபவிக்கும் சோதனையும் இதயத்தைத் துடைக்கிறது.

நீட் தேர்வு நம் மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்துவிட்டது. அத்தகைய தேர்வுகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவை கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டும். அவர்கள் எதேச்சதிகார முறையில் இளைஞர்கள் மீது திணிக்கப்படக்கூடாது, மாறாக அவர்களின் கனவுகளையும் அபிலாஷைகளையும்

நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும். இங்கு ஆயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

அனிதாவின் குடும்பத்தினருக்கு எனது முழு ஆதரவையும் உறுதியளித்துள்ளேன். அவர்களின் போராட்டத்தில் நான் அவர்களுடன் நிற்கிறேன். அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் முயற்சி." என தன்னுடைய முகநூல் பக்கத்தில் இச்சந்திப்பு பற்றி பதிவிட்டுள்ளார்.

2017 உச்சநீதிமன்ற தீர்ப்பும்; காங்கிரஸும்.

கடந்த 2017ஆம் ஆண்டு நீட் தேர்வு வழக்கில் வாதாடிய காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. ப. சிதம்பரம் அவர்களின் மனைவியும், வழக்கறிஞ்சருமான திருமதி. நளினி சிதம்பரம் அவர்கள் நீதிமன்ற உத்தரவிற்கு பிறகு பிரபல தமிழ் செய்தி நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் முன்பு பேட்டியளித்த போது "உச்சநீதிமன்றம் நல்ல தீரப்பை வழங்கியிருக்கிறது. இவ்வளவு நாள் தமிழக மாணவர்களை திசைதிருப்பியிருந்தார்கள்" என்று கூறியிருந்தார்.


ராகுலின் திடீர் பல்டி காரணம் 2024 தேர்தலா?

இச்சந்திப்பு பற்றி சமூக வளைத்தில் சிலர் ராகுலின் திடீர் பல்டிக்கு காரணம் என்ன? என்று கேள்வியெழுப்புகின்றனர். 2024 தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்கள் இருக்கிற நிலையில். மற்ற மாநிலங்களில் குறிப்பாக வடமாநிலங்கிளல் காங்கிரஸ் தொடர்ந்து வீழ்ச்சியை சந்திக்கின்ற நிலையில். 2024 தேர்தலில் அண்டை மாநிலமான கேரளாவிலுள்ள வயநாடு தொகுதிக்கு பதிலாக ராகுல் காந்தி தமிழகத்தில் போட்டியிட திட்டமிடுகிறாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஏனென்றால் அங்கு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியும், பாஜகவும் 2024 தேர்தலுக்காக களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.


அது ஒருபுறம் இருக்க தற்போது பாஜக, கடந்த 2019 தேர்தலில் மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழந்த 5 மாநிலங்களில் உள்ள 144 தொகுதிகளை கண்டறிந்து அதற்கான தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது. இதற்காகத் தான் இப்போது மாணவி அனிதாவின் குடும்பத்தினரை சந்தித்தார் என அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிப்படுகின்றன.

Similar News