ஜெயலலிதா பிறந்தநாள் விழா: அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை.!
ஜெயலலிதா பிறந்தநாள் விழா: அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை.!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாள் விழா வருகின்ற 24ம் தேதி வருகிறது. இதனையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்துகின்றனர்.
இது பற்றி அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஒ.பன்னீர்செல்வம், மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஆகியோர் மரியாதை செலுத்துவார்கள்.
இதன் பின்னர் இருவரும் ஜெயலலிதா குறித்த சிறப்பு மலரை வெளியிடுவார்கள். கொரோனா பரவல் காரணமாக தடுப்பு முறைகளை முறையாக பின்பற்றி தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.