மக்களுக்காக திறக்கப்படும் ஜெயலலிதா இல்லம்.. தமிழக அரசு உத்தரவு.!

மக்களுக்காக திறக்கப்படும் ஜெயலலிதா இல்லம்.. தமிழக அரசு உத்தரவு.!

Update: 2021-01-22 16:50 GMT

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லம், ஜனவரி 28ம் தேதி முதல் மக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு பின்னர் அவர் வசித்து வந்த போயஸ் தோட்டமான வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்த திட்டத்திற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மற்றும் மகன் தீபக் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்கள் இருவருக்கும் தமிழக அரசு சார்பில் உரிய இழப்பீட்டுத்தொகை வழங்கப்படும் என தெரிவித்தது. இதனையடுத்து இந்த வழக்கானது நீதிமன்றத்திற்கு சென்று முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், நினைவில்லத்தை வருகின்ற 27ம் தேதி முதல் மக்கள் பார்வையிடலாம் என அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்துள்ளார். இந்த நினைவிடத்தில் 15000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்படும் எனவும் கூறியுள்ளார். புதிய புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து வருவது அ.தி.மு.க. தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
 

Similar News