ஜெயலலிதா நினைவிடம் விரைவில் திறக்கப்படும்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!

ஜெயலலிதா நினைவிடம் விரைவில் திறக்கப்படும்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!

Update: 2020-12-27 12:17 GMT

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிவடைந்து திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பொதுக்கூட்டத்தில் கூறியுள்ளார்.

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள ஓய்.சி.எம்.ஏ மைதானத்தில் அதிமுகவின் தேர்தல் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் பணிகள் முடிவடைய உள்ளது. விரைவில் அம்மாவின் கோயில் திறப்பு விழா நடைபெறும்.

இந்த விழாவில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சி தொண்டனும் தங்களது குடும்பத்துடன் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும். மேலும், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டனில் உள்ள வேதா நிலையம் அரசு உடைமையாக மாற்றப்படும் வேலைகள் நடந்து வருகிறது. அந்த வீட்டையும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிடலாம். இவ்வாறு அவர் பேசினார்.
 

Similar News