"மக்களை வரிவிதிப்புக்கு தாயர்படுத்துவதாக வெள்ளை அறிக்கை" - ஜெயக்குமார் விளக்கம்
ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.;
"தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பதில் மக்களை திசை திருப்புகிறது தி.மு.க அரசு" என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
இன்று நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கை தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, "வெள்ளை அறிக்கையில் புதிய விஷயங்கள் ஏதும் குறிப்பிடவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பதில் மக்களை திசை திருப்புகிறது திமுக அரசு. சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் முன்கூட்டியே வெள்ளை அறிக்கை ஏன்" என கேள்வி எழுப்பியுள்ளார்.
"தி.மு.க அரசு விட்டுச் சென்ற கடனுக்கும் அ.தி.மு.க அரசுதான் வட்டி கட்டியது. மக்களை வரிவிதிப்புக்கு தாயர்படுத்துவதாக வெள்ளை அறிக்கை உள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.