மத்திய அமைச்சர் கைதால் எங்களை அடக்கி விட முடியாது ! சிவசேனாவுக்கு பா.ஜ.க. தலைவர் கண்டனம் !

இந்நிலையில், மத்திய அமைச்சர் நாராயண் ரானே, ரத்னகிரி மாவட்டம், சிப்லுனில் மக்கள் ஆசி யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அவர் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, மகாராஷ்டிரா போலீசாரால் நாராயண் ரானேவை கைது செய்தனர். இவரது கைது முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உத்தரவின் பேரிலேயே நடந்துள்ளதாக பாஜக கண்டனம் தெரிவித்தது.

Update: 2021-08-25 01:48 GMT

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.பி. நாராயண் ரானே. சமீபத்தில் பிரதமர் மோடி தனது அமைச்சரவை விரிவாக்கம் செய்தபோது மத்திய சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் நாராயண் ரானே, ரத்னகிரி மாவட்டம், சிப்லுனில் மக்கள் ஆசி யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அவர் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, மகாராஷ்டிரா போலீசாரால் நாராயண் ரானேவை கைது செய்தனர். இவரது கைது முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உத்தரவின் பேரிலேயே நடந்துள்ளதாக பாஜக கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது செய்யப்பட்டதற்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை மகாராஷ்டிரா அரசு கைது செய்தது, அரசியலமைப்பு மதிப்புகளை மீறுவதாகும். இது போன்ற நடவடிக்கையால் நாங்கள் பயப்படவோ, அடங்கி போகவோ மாட்டோம்.

ஆசி யாத்திரையால் பாஜகவுக்கு கிடைக்கும் மகத்தான் ஆதரவால், இவர்கள் சிரமப்படுகிறார்கள்? ஜனநாயக முறையிலான எங்களது போராட்டம் நீடிக்கும். பயணம் தொடரும். இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source: DailyThanthi

Image Courtesy: India Today

https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/25060142/BJP-condemns-arrest-of-controversial-Union-Minister.vpf

Tags:    

Similar News