நெருப்பில் பூத்த மலர் பா.ஜ.க, வெயிலில் வாடாது - குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நட்டா!

நெருப்பில் பூத்த மலர் தான் பா..ஜக எனவே அது வெயிலினால் வாடாது என்று தமிழகத்தில் நடக்கும் பா.ஜ.க பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்.

Update: 2023-03-24 13:27 GMT

தமிழகத்தில் தற்பொழுது பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவிற்கு இடையே கூட்டணி தொடர்பாக பல்வேறு விரிசல்கள் ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக இந்த ஒரு விரிசல்களை எதிர் தரப்பினர் பெரிதாக பூதாகரமாக காண்பித்து பெரும் பிரச்சனையை கிளப்பி இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழக பா.ஜ.கவில் நடக்கும் குழப்பங்கள் குறித்து தன்னிடம் புகார் தெரிவித்தவர்களிடம் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நச்சுன்னு பதிலை கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார். குறிப்பாக பா.ஜ.க என்பது நெருப்பில் பூத்த மலர், எனவே அது வெயிலில் கருகாது என்று அவர் கூறுகிறார். சில காலங்களாகவே தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்களை கடுமையாக விமர்சித்து விட்டு அக்கட்சியின் ஐ.டி பிரிவு மாநில தலைவர் நிர்மல் குமார் கூட்டணி கட்சியான அ.தி.மு.கவில் இணைந்து இருக்கிறார். அதனை தொடர்ந்து முன்னால் அமைச்சர்களுக்கு இடையான பேச்சுவார்த்தையின் போது பெரிய பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது.


கடந்த 17ஆம் தேதி நடந்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் போது பேசிய அண்ணாமலை அவர்கள் கூட்டணிக்காக சமரசம் செய்ய வேண்டிய நிலை வந்தால், 'நான் தலைவர் பதவியில் இருந்து விலங்கு தயாராக இருக்கிறேன்' என்று கருத தெரிவித்து இருக்கிறார். இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த உயர் பதவியில் இருப்பவர்கள் உட்பட பா.ஜ.க முக்கிய தலைவர்கள் சிலர் சமீபத்தில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிடம் பேசி இருக்கிறார்கள். எனவே சமீப காலமாக தமிழக பா.ஜ.கவில் நடக்கும் நிகழ்வுகளை மற்றும் கட்சி வளர்ச்சி பாதிக்கும்.எனவே லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைப்பதில் சிக்கல் ஏற்படும் என தங்களது கவலைகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பா.ஜ.க கூட்டணியில் உள்ள ஒரே பெரிய கட்சி அ.தி.மு.க மட்டும் தான்.


அது வெளியேறிவிட்டால் மற்ற மாநிலங்களில் கூட்டணி அமைப்பதிலும் சிக்கல் ஏற்படலாம் என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். இதற்கு ஜே.பி.நட்டா அவர்கள் கூறுகையில், கட்சியின் செயல்பாடுகளை தற்பொழுது உன்னிப்பாக கவனித்து வருகிறோம். எனவே கட்சியின் நலனை கொண்டு விரைவில் முக்கிய முடிவு எடுக்கப்படும் அதைப் பற்றி தற்பொழுது பேச வேண்டாம். லோக்சபா தேர்தல் வெற்றியை மனதில் வைத்து பணியாற்றுங்கள் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

Input & Image courtesy: Dinamalar News

Tags:    

Similar News