அறிவாலய ஆதரவாளர்களை கோபப்படுத்திய ஜே.பி.நட்டா'வின் பேச்சு - என்ன கூறினார் தெரியுமா?

தமிழகம் வந்த பா.ஜ.க'வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியது தி.மு.க'வினரை கோபப்படுத்தியுள்ளது.

Update: 2022-09-23 12:24 GMT

தமிழகம் வந்த பா.ஜ.க'வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியது தி.மு.க'வினரை கோபப்படுத்தியுள்ளது.

'ஊழல், கட்டப்பஞ்சாயத்து பேசும் தி.மு.க'வை புறக்கணிப்போம் என ஜே.பி.நட்டா பேசியது தி.மு.க'வினரை கோபமாக்கியுள்ளது. பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்தார். வந்த அவர் காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது, 'தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் குடும்ப அரசியல் இருக்கிறது. தமிழ்நாட்டில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என வரிசையாக வருகின்றனர். இந்தியாவின் சில மாநிலங்களில் குடும்ப அரசியலை எதிர்த்து பா.ஜ.க போராடி வருகிறது. குடும்ப அரசியல், ஊழல், கட்டப்பஞ்சாயத்து, மாநில பிரிவினைவாதம் பேசும் தி.மு.க'வை புறக்கணிப்போம் விரைவில் தமிழ்நாட்டில் தாமரை மலரும்' எனக் கூறினார். இதன் காரணமாக தமிழகம் வந்த ஜே.பி.நட்டா பற்றிய அவதூறு கருத்துக்களை தி.மு.க'வினர் சிலர் இணையத்தில் பரப்பி வருகின்றனர். 


Source - Junior Vikatan

Similar News