"வெறும் மன்னிப்பு கடிதம் போதும் போ" - பெண் போலீசிற்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக இளைஞர் அணியினரை விடுவித்த திமுக அரசு

பெண் காவலரிடம் அத்துமீறிய விவகாரத்தில் காவல்துறை கைது செய்த திமுகவினர் மன்னிப்பு கேட்பதாக கூறியதால் திமுக அரசு அவர்களை விடுவித்துள்ளது.

Update: 2023-01-09 02:29 GMT

பெண் காவலரிடம் அத்துமீறிய விவகாரத்தில் காவல்துறை கைது செய்த திமுகவினர் மன்னிப்பு கேட்பதாக கூறியதால் திமுக அரசு அவர்களை விடுவித்துள்ளது.


விருகம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலிகிராமம் தசரதபுரம் பூத் அருகில் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அங்கு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்து வரும் இளம் பெண் காவலர் ஒருவர் சக காவலர்களோடு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திமுகவின் இளைஞர் அணியைச் சேர்ந்த பிரவீன், ஏகாம்பரம் ஆகிய இரு நிர்வாகிகளும் அந்த பெண் காவலாளியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அங்கிருந்த காவலர்கள் இருவரையும் பிடித்து கடுமையாக கண்டித்தனர். இதனால் பயந்து போன இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர் அவர்களை போலீசார் விரட்டிப் பிடித்தனர். இந்நிலையில் பெண்ணிடம் அத்துமீறியவர்களுக்கு ஆதரவாக திமுக நிர்வாகிகள் போலீஸிடம் சமாதானம் பேசி இந்த பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அந்த பெண் போலீஸ் புகார் அளித்திருந்தார்.

கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் பங்குபெற்ற திமுகவின் இளைஞர் அணியை சேர்ந்த இருவர் அங்கு பாதுகாப்பிற்கு நின்ற பெண் போலீசாரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு திமுக இளைஞர் அணியினர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக மகளிரை முகம் சுளிக்க வைத்தது.

திமுக கூட்டத்தில் நடந்த இதுபோன்ற இழிவான செயலல் பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு பெருகியது. எதிர்க்கட்சிகள் திமுகவின் மகளிரணி தலைவி பங்கேற்ற கூட்டத்திலேயே இதுபோன்ற பெண் காவலருக்கு தொல்லை கொடுக்கும் கேவலமான செயலை திமுக செய்வது ஏற்க முடியாது என குரல் எழுப்ப ஆரம்பித்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்ன தைரியம் இருந்தால் பெண் காவலரின் மீது கை வைப்பீர்கள்? என கொதித்தார்.

ஆனாலும் திமுக அரசு பாலியல் தொல்லைக்கு ஆளான பெண் காவலரை சமாதானம் செய்வதிலேயே மும்முரமாக இருந்ததே தவிர பாலியல் தொல்லை கொடுத்தவர்களை இரண்டு நாள் ஆகியும் கைது செய்வதில் மும்முரம் காட்டவில்லை. அனைத்து தரப்பிலும் எதிர்ப்புக்குரல் கிளம்பியதால் இருவரையும் மூன்று நாட்கள் கழித்து வேறு வழியின்றி கைது செய்தது திமுக அரசு.

இந்த நிலையில் தற்பொழுது அந்த பெண் காவலரை சமாதானப்படுத்தி மேல் நடவடிக்கை தேவை இல்லை என பெண் போலீசாரை கூற வைத்துள்ளனர். கோயம்பேடு துணை கமிஷனர் குமார் முன்பு நேற்று பிற்பகல் 2:15 மணியளவில் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள் பிரவீன், ஏகாம்பரம் இருவரும் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்பொழுது பெண் போலீஸ் தான் அளித்த புகார் மீது எந்த நடவடிக்கை ஏதும் தேவையில்லை என எழுதி கொடுத்ததாக தெரிகிறது, இதனால் பெண் காவலரிடம் அத்துமீறி பாலியல் தொல்லை செயலில் ஈடுபட்ட இருவரும் மன்னிப்பு கடிதத்தை எழுதிக் கொடுத்துவிட்டு செல்லுங்கள் எனக் கூறியதால் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு சென்றனர்.



பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசாரிடம் அத்துமீறிய இருவரை வெறும் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிவிட்டு அவர்களை திமுக அரசின் காவல்துறை விடுவித்தது பொதுமக்கள் மத்தியில் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News