'என்னைய்யா இப்படி போஸ்டிங் போடுறீங்க' - அறிவாலயத்தை எதிர்த்து கடையம் தி.மு.கவினர் கூண்டோடு ராஜினாமா!
கடையத்தில் ஒன்றிய செயலாளர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளார்.
கடையம் யூனியனில் இருபத்தி ஆறு வருடங்களாக தி.மு.க ஒன்றிய செயலாளராக செயல்பட்டு வந்தவர் குமார். நடந்து முடிந்த 15வது தி.மு.க உட்கட்சித் தேர்தலில் கடையம் ஒன்றியம் வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டது. வடக்கு ஒன்றியத்திற்கு மகேஷ் மாயவனும், தெற்கு ஒன்றியத்திற்கு ஜெயக்குமாரும் செயலாளராக நியமிக்கப் பட்டனர். இதனால் கடல் பகுதி தி.மு.கவினர் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள். ஒன்றிய செயலாளர் நியமனத்திற்கு தற்போது எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று காலையில் கடலில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டனர்.
மேலும் ஒன்று திரண்ட தி.மு.கவினர் ஊர்வலமாக சென்றனர் கடையம் யூனியன் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படம் முன்பு தி.மு.கவினர் ஒன்று திரண்டனர். புதிய நிர்வாகிகள் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அனைவரும் கூண்டோடு தற்போது ராஜினாமா செய்துள்ளார்கள். யூனியன் சேர்மன் மற்றும் 7 பஞ்சாயத்து தலைவர்கள் உட்பட சுமார் 300 கட்சி பிரதிநிதிகள் தங்கள் ராஜினாமா கடிதங்களை தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைத்தார்கள் இதனால் தற்போது அந்த பகுதியில் பரபரப்பு காணப்படுகின்றது.
இந்நிகழ்ச்சியில் கடையும் யூனியன் சேர்மன் செல்லம்மாள், பஞ்சாயத்து தலைவர் மாரியப்பன், ரவிச்சந்திரன், முருகன் போன்ற பலரும் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். மேலும் கழக நிர்வாகிகள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் இந்த ஒரு ராஜினாமா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து உள்ளார்கள். இச் சம்பவத்தின் காரணமாக கடையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Input & Image courtesy: News