"கல்யாணராமன் கைது ஏற்க முடியாது" - தி.மு.க.வுக்கும், போலீசாருக்கும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை!

பாஜக நிர்வாகி கல்யாணராமன் கைதை எந்த விதத்திலும் பாஜக ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை பாஜக பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

Update: 2021-10-19 02:04 GMT

பாஜக நிர்வாகி கல்யாணராமன் கைதை எந்த விதத்திலும் பாஜக ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை பாஜக பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். பாஜக நிர்வாகியான கல்யாணராமனை நேற்று முன்தினம் நள்ளிரவில் போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்திருப்பது பாஜக நிர்வாகிகள் மத்தியில் மட்டுமின்றி தொண்டர்களிடையேயும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. கல்யாணராமனை கைது செய்ய சென்ற போலீசார் மகளிர் என்று பாராமல் ஒரு உயர் அதிகாரி அடிப்பதற்கு கை நீட்டுகிறார் இதன் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், இந்த கைது விவகாரம் தொடர்பாக சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: தமிழக போலீசால் கைது செய்யப்பட்டுள்ள கல்யாணராமனை ஜாமினில் எடுக்க பாஜக வழக்கறிஞர்கள் குழு சென்றபோது, கடந்த 2018இல் போடப்பட்ட எப்ஐஆர் (490), 2019-இல் போடப்பட்ட எப்ஐஆர் (336), 2020-இல் போடப்பட்ட எப்ஐஆர் (60), (98), (152) என இன்று புதிதாக 5 எப்ஐஆர்-ஐ நீதிபதியிடன் போலீஸ் தரப்பில் கொடுத்துள்ளனர். இந்த எப்ஐஆர் கீழ் கல்யாணராமனை இன்னும் கைது செய்யாமல் இருக்கிறோம் என்று போலீஸ் தரப்பில் கூறியுள்ளனர். எனவே கல்யாணராமன் கைதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற நடவடிக்கையை பாஜக சும்மா பார்த்துக் கொண்டு இருக்காது என்று எச்சரிக்கை விடுத்தார்.

தமிழக போலீசார் நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டும். எனவே காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் என கூறினார். மேலும், கல்யாணராமன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு தற்போதுதான் வெளியே வந்துள்ளார். இந்த வழக்குகள் எல்லாம் குண்டர் சட்டம் போடுவதற்கு முன்பாக உள்ள வழக்குகள் ஆகும். நீதிபதியிடம் ஜாமின் வழங்க முன்வரும்போது, புதிதாக 5 எப்ஐஆர்ஐ போலீசார் காட்டுகிறார்கள். இது போன்ற அநியாயமான செயலை பாஜக பார்த்துக்கொண்டு திமுக ஆட்சியாளர்கள் நினைத்தால் விளைவுகள் வேறுமாதிரி சந்திக்க இருக்கும் எனக் கூறினார். கல்யாணராமன் கைது செய்திருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். காவல்துறை ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக இருக்கக்கூடாது. காட்சிகள் மாறும், காலங்கள் மாறும் எனவே அனைவருக்கும் நியாயமான முறையில் காவல்துறையினர் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source: Asianet

Image Courtesy:Samayam


Tags:    

Similar News