தி.மு.க. கொடிகம்பம் நட்டபோது சிறுவன் உயிரிழப்பு நெஞ்சை அதிர வைக்கிறது! கமல்ஹாசன் ட்வீட்!

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி பங்கேற்ற திருமண விழாவிற்காக திமுக கொடிக்கம்பம் நட்ட சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

Update: 2021-08-23 13:05 GMT

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி பங்கேற்ற திருமண விழாவிற்காக திமுக கொடிக்கம்பம் நட்ட சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் திமுக கொடி கம்பம் நடப்பட்டது. அப்பணியில் ஏகாம்பரம் என்பவரது இளையமகன் தினேஷ் 13 என்ற சிறுவன் ஈடுபட்டிருந்தார். அப்போது சிறுவன் நட்டுக்கொண்டிருந்த கொடி கம்பம் மேலே உயர் அழுத்த மின் கம்பியில் உரசியுள்ளது. இதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டான். இதனை தொடர்ந்து சிறுவனை மீட்டு மருத்துவனையில் அனுமதித்தனர். ஆனால் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். 


இந்நிலையில், சிறுவன் உயிரிழப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கொடிகம்பங்கள் நடும் பணிக்குச் சென்ற 13 வயது சிறுவன் பலியான சம்பவம் நெஞ்சை அதிர வைக்கிறது. கொடிக்கம்பங்களும், பேனர்களும், அலங்கார வளைவுகளும் தொடர்ந்து உயிர்களைக் காவு வாங்குகின்றன. இந்தக் கீழ்மையில் இருந்து அனைத்துக் கட்சிகளுமே விடுபட வேண்டும். இவ்வாறு அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News