காஞ்சிபுரம் தேர்தல் நடத்தும் அதிகாரி திடீர் உயிரிழப்பு: மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு !
காஞ்சிபுரத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சிபுரத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாங்கி, ஊராட்சியில் துணைத் தலைவர் பதவிக்காக வார்டு உறுப்பினர்களிடம் மறைமுகத் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. அப்போது தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஹரி என்பவர் வாக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென்று உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்தார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மறைமுகம் தேர்தல் மறுஉத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. தேர்தல் நடத்து அலுவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அரசு ஊழியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source, Image Courtesy: Puthiyathalamurai