காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட 15வது அமைப்பு தேர்தல் குன்றத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான தா.மோ. அன்பரசன் தலைமையில் நேற்று (ஜூன் 29) நடைபெற்றது.
இந்த தேர்தலில் 10 ஒன்றியங்களுக்கான நிர்வாகிகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அப்போது திருப்போரூர் ஒன்றியத்தை சேர்ந்த ரோஸ் நாகராஜன் என்பவர் ஒன்றிய செயலாளருக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றிருந்தார். அப்போது திருப்போரூர் ஒன்றிய நிர்வாகிகள் அவரை தாக்கியுள்ளனர்.
இதனை பார்த்த போலீசார் அவரை அங்கிருந்து மீட்டு வெளியில் கொண்டு வந்து விட்டனர். அப்போது அவர் கிழிந்த சட்டையுடன், காயங்களுடன் வெளியேறினார். இது தொடர்பாக நாகராஜன் குன்றத்தூர் காவல் நிலையத்தில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் சென்று புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிழிந்த சட்டையுடன் சென்ற ரோஸ் நாகராஜனுடன் தாம்பரம் எம்.எல்.ஏ., ராஜாவும் உடன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளும் கட்சியான தி.மு.க.வில் ஜனநாயகப்படி தேர்தல் நடைபெறுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Source, Image Courtesy: Abp