அத்தைக்கும்-மருமகனுக்கும் இடையே வெடித்த மோதல் : 3௦ வயதுக்கு கீழ் உள்ள இளம் பெண்களை குறி வைக்கும் தி.மு.க யூத் விங்!

Kanimozhi fumes as Udhaya enrols women into DMK youth wing

Update: 2021-12-29 02:15 GMT

3௦ வயதுக்கு கீழ் உள்ள இளம் பெண்களை கட்சியில் சேர்ப்பது குறித்த, உதயநிதியின் முடிவுக்கு, திமுக மகளிரணி செயலாளர் கே.கனிமொழி கூறியிருப்பது அவரது மருமகன் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே உரசல் ஏற்படக்கூடும் என்ற ஊகத்தை கிளப்பியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் மகனும், திமுக கட்சியின் இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி கோயம்புத்தூரில் ஞாயிற்றுக்கிழமை ஒரு சேர்க்கை இயக்கத்தைத் தொடங்கினர். அதில் 3௦ வயதுக்கு கீழ் உள்ள இளம் பெண்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.  கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி இந்த முயற்சி மேம்போக்காக மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அக்கட்சியின் உள்விவகாரங்களில் ரகசியம் காக்கும் தி.மு.க நிர்வாகிகள், கொஞ்சம் வெளிப்படையாவும் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். 2019ல் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஒரு சில மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள், இளைஞரணி சார்பில் மகளிர் அணியை உருவாக்க முயற்சி செய்தனர். இந்த நடவடிக்கைக்கு தலைமையின் ஆதரவு இருப்பதாகவும் பரவலாக நம்பப்பட்டது.

ஆனால், புதிய பிரிவை இளைஞர் மகளிர் பிரிவு என்று அழைப்பதால் கனிமொழிக்கு அதில் உடன்பாடில்லை என்று சிலர் கூறினர். தற்போதுள்ள மகளிர் பிரிவில் பணியாற்றுபவர்கள் மற்றும் நிர்வாகிகள் 'வயதான பெண்கள் பிரிவு' உறுப்பினர்களாக அடையாளம் காணப்படுவதற்கு இது வழிவகுக்கும். இதனால் அப்போது அத்திட்டம் கைவிடப்பட்டது.

எல்லா கட்சிகளுக்கும் இளம் ரத்தம் புகட்ட வேண்டும். இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி தலைவர்களின் அரசியல் எதிர்காலம் இந்த உறுப்பினர்களுக்கு அவர்கள் அளிக்கும் கருத்தியல் பயிற்சியின் அடிப்படையிலேயே அமையும் என அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Tags:    

Similar News