"விரைவில் NEETக்கும் சரியான முடிவு எட்டப்படும்" - தொடர்ந்து பேசும் கனிமொழி !

Breaking News.;

twitter-grey
Update: 2021-09-13 13:00 GMT
"விரைவில் NEETக்கும் சரியான முடிவு எட்டப்படும்" -  தொடர்ந்து பேசும்  கனிமொழி !

"விரைவில் நீட்டுக்கும் சரியான முடிவு எட்டப்படும்" என தேய்ந்த ரெக்கார்டு போல் தி.மு.க எம்.பி கனிமொழி பேசியுள்ளார்.

சென்னை அண்ணா நகர் வடக்கு சத்யா நகர் பகுதியில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மகளிர் அணி செயலாளர் கனிமொழி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, "பல திறமையான மருத்துவர்கள் தமிழகத்தில் இருந்து உருவாகியுள்ளனர். மற்றவர்களிடமிருந்து வாய்ப்பை பரிப்பதுதான் நீட் தேர்வு, நீதிமன்றம் மருத்த விஷயங்கள் மற்றும் ஒன்றிய அரசு மருத்த பல விஷயங்கள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல் விரைவில் நீட்டுக்கும் சரியான முடிவு எட்டப்படும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஒருபோதும் நாங்கள் ஏற்க மாட்டோம். புதிய கல்விக் கொள்கை என்பது அனைவருக்குமான கல்வி என்பதை மறுக்கும் கல்வி கொள்கையாகும்,

தி.மு.க எப்போதும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவே குரல்கொடுக்கும்" என கூறினார்.

Twitter

Tags:    

Similar News