முத்தலாக் சட்டத்தை வரவேற்று பிரச்சாரம் செய்த கனிமொழி! இரட்டை வேடம் போடலாம் ஆனாலும் இப்படியா?

முத்தலாக் சட்டத்தை வரவேற்று பிரச்சாரம் செய்த கனிமொழி! இரட்டை வேடம் போடலாம் ஆனாலும் இப்படியா?

Update: 2021-02-14 10:45 GMT

திருப்பூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய கனிமொழி  "முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது" என கூறியது தி.மு.கவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் இவர் யாருக்காக பிரச்சாரம் செய்கிறார் என்ற கேள்வியும் தி.மு.கவினருக்கு எழுந்துள்ளது. ஒருபுறம் "கோ பேக் மோடி" என ஸ்டாலின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வரும் நிலையில் மறுபுறம் எந்த மோடியை எதிர்க்கிறார்களோ அதே மோடி அரசு கொண்டு வந்த முத்தலாக் தடை சட்டத்தை கனிமொழி ஆதரித்து பேசியது தி.மு.கவினருக்கே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர், காங்கயம் கிராஸ் ரோட்டில் வாகன பிரசாரத்தில் தி.மு.க எம்.பி கனிமொழி பேசியதாவது, "கடந்த, 10 ஆண்டாக ஆட்சியில் உள்ள அ.தி.மு.க அரசு எந்த அடிப்படை வசதியும் செய்யவில்லை. புதிய வேலை வாய்ப்பு உருவாகவில்லை. தொழில் முதலீடு எதுவும் வரவில்லை" என வழக்கம்போல் அ.தி.மு.க அரசை குற்றம்சாட்டி பேசினார். 

மேலும் பேசிய அவர்,  "தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவிக்கும் அறிவிப்புகளை தான், பழனிசாமி அரசு செய்கிறது. முத்தலாக் தடைச் சட்டம் வரவேற்கத்தக்கது" என்றார்.

இதை தி.மு.கவின் எம்.பி கனிமொழி கடந்த 2019ம் ஆண்டு மக்களவையில் பேசிய போது, ''மத்திய அரசின் முத்தலாக் மசோதா குறிப்பிட்ட மதத்திற்கும், சமுதாயத்திற்கும் எதிரானது. நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்களை பாதுகாப்பற்றவர்களாக உணர வைக்க தி.மு.க அனுமதிக்காது என்றார். குறிப்பிட்ட சமுதாயம் மற்றும் மதத்தை குறிவைத்து கொண்டு வரப்பட்டுள்ள இந்த முத்தலாக் தடை சட்டத்தை தி.மு.க எதிர்க்கிறது'' என்றார்.

மேலும், "கணவன் மனைவிக்கிடையே நடக்கும் இந்த சிவில் விவகாரத்தை கிரிமினல் குற்றமாக எவ்வாறு கருத முடியும். எந்த ஒரு நாட்டிலாவது இப்படி ஒரு சட்டத்தை கொண்டுவர முடியுமா?" என்றும் கேள்வி எழுப்பி பேசினார். ஆனால் இந்த சட்டம் நடைமுறைபடுத்தப்பட்ட பிறகு அதனால் ஏற்படும் நன்மைகளை இஸ்லாமிய பெண்களே வரவேற்ற நிலையில் தற்பொழுது ஆதரித்து பேசும் நிலையில் தி.மு.க தள்ளப்பட்டுள்ளது.

இதுபோலவே அரசியல் லாபத்திற்காக மத்திய அரசின் சட்டங்களை எதிர்ப்பது பின் மக்களிடம் வரவேற்பு ஏற்பட்ட பின் பின்வாங்குவதும் தி.மு.க'வின் இயல்பாகிவிட்டது.

Similar News