தலைமை குறித்து விமர்சனம் செய்த கபில் சிபல் ! வீட்டை தாக்கிய காங்கிரஸ் கட்சியினர்!
பஞ்சாப் காங்கிரஸில் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவதாக ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் கடுமையாக விமர்சனங்களை அக்கட்சியின் மூலத்த தலைவர் கபில் சிபல் பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சொந்த கட்சியினர் அவரது வீட்டில் தாக்குதலை நடத்தினர். இதில் கார் சேதமடைந்தது.

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியில் முன்னணி படுத்தியபோது 2 முறை பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்து. இதற்கு பொறுப்பேற்று தனது கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகியும் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை இன்றி தத்தளித்து வருகிறது. இதன் காரணமாகவும், உட்கட்சி பூசலாலும் சில மாநிலங்களில் இருந்த மாநில ஆட்சியும் பறிபோனது.
அதே போன்ற நிலை பஞ்சாபிலும் தற்போது ஏற்பட்டுள்ளது. சித்துவுக்காக முதலமைச்சர் அமரீந்தர் சிங்கை ராஜினாமா செய்யச் சொல்லினர். இதனால் அவர் தற்போது பாஜகவுக்கு செல்லும் மனநிலையில் உள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் செய்தியாளர்களை சந்தித்து தலைமை இல்லாதது குறித்தும், ராகுல் பெயரை குறிப்பிடாமலும் விமர்சனம் செய்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ராகுல் காந்தியின் ஆதரவாளர்கள் கபில் சிபல் வீட்டின் முன் கூடி கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் கபில் சிபல் கார் சேதமடைந்தது. கபில் சிபலுக்கு எதிராக காங்கிரஸார் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Dinamalar