காங்கிரசில் இப்படி அடிச்சிக்கிட்டா பாகிஸ்தானுக்கு சாதகமாகும்! - கபில்சிபல் எச்சரிக்கை.!
பஞ்சாபில் தற்போதைய சூழ்நிலை பாகிஸ்தான் மற்றும் அந்நாட்டில் இயங்கும் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.க்கு சாதகமாகும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பஞ்சாபில் தற்போதைய சூழ்நிலை பாகிஸ்தான் மற்றும் அந்நாட்டில் இயங்கும் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.க்கு சாதகமாகும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த அக்டோபர் மாதம் கட்சி தலைமைக்கு கடிதம் ஒன்றை எழுதிய 23 பேர்களில் சார்பாக நான் பேசுகிறேன். கட்சி தலைவர், காங்கிரஸ் செயற்குழு, மத்திய தேர்தல் குழுவுக்கு தேர்தல் நடத்துவது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்து வருகிறோம்.
எனவே எங்களுடைய கருத்துகளை தலைமை கேட்க வேண்டும். திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மேலும், நாங்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிரானவர்கள் இல்லை. தற்போது நாம் ஏன் இந்த நிலையில் உள்ளோம் என்பதை அறிந்து கொள்வதற்காக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று சக தலைவர்கள் கடிதம் எழுதியிருக்கலாம் என்று எதிர்பார்க்கிறேன்.
தற்போதைய சூழ்நிலையில் நமது கட்சியில் தலைவர் என்று யாரும் இல்லை. இதன் காரணமாக பஞ்சாபில் யார் முடிவு எடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. எல்லையில் உள்ள மாநிலத்தில் நடக்கும் நிகழ்வுகள் பாகிஸ்தான் மற்றும் உளவு அமைப்பான ஐஎஸ்.ஐ.க்கு சாதமாக அமையும். பஞ்சாப் வரலாறு மற்றும் பிரிவினைவாதிகளின் எழுச்சி பற்றியும் நமக்கு தெரியும். எனவே அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக இருப்பதை காங்கிரஸ் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Source: Dinamalar
Image Courtesy: DT Next