கருணாநிதி படத்திறப்பு விழா.புறக்கணிக்கும் அ.தி.மு.க !

தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்திறப்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார். இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால், முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.;

Update: 2021-08-02 05:10 GMT
கருணாநிதி படத்திறப்பு விழா.புறக்கணிக்கும் அ.தி.மு.க !

தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது.  

தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்திறப்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார். இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால், முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.



இந்நிலையில், படத்திறப்பு விழாவை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி அதிமுக கட்சித்தலைமை அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source: News 7

Image Courtesy: thequint

https://news7tamil.live/source-says-admk-plans-to-ignore-karunanidhis-picture-opening-ceremony.html

Tags:    

Similar News