கருணாநிதி படம் சட்டமன்றத்தில் திறப்பு. ஸ்டாலின் மகிழ்ச்சி !

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்த விழாவில் கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.;

Update: 2021-08-02 13:49 GMT
கருணாநிதி படம் சட்டமன்றத்தில் திறப்பு. ஸ்டாலின் மகிழ்ச்சி !

"முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்ததை கண்டு நெகிழ்கிறேன்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இது பற்றி அவர் கூறும்போது: வாழ்நாளில் 50 ஆண்டுகளுக்கு மேலாக சட்டமன்றத்தில் இருந்த மாபெரும் தலைவர் கருணாநிதியின் உருவப்படம் சட்டபேரவையில் திறக்கப்பட்டுவிட்டது என்றார்.


சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்த விழாவில் கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.


இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் ஸ்டாலின், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Source: Dinakaran

Image Courtesy: ட்விட்டர்

https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=695053

Tags:    

Similar News