கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள அண்ணாநகரில் நீண்ட நாட்களாக விநாயகர் சிலை ஒன்று வைக்கப்பட்டு பொதுமக்கள் வழிப்பட்டு வந்தனர். இந்த சிலை இடைஞ்சலாக இருப்பதாக அருகாமையில் உள்ள ஒரு வீட்டு உரிமையாளர் காவல் நிலையத்திலும், புகளூர் தாசில்தாரிடம் புகார் கூறினார்.
இந்த புகாரை தொடர்ந்து புகளூர் தாசில்தார் மதிவாணன் தலைமையிலான வருவாய்த்துறையினர் சிலையை அங்கிருந்து எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்த அக்கம், பக்கத்தினர் மற்றும் பாஜக நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று விநாயகரை தங்களிடம் கொடுக்குமாறு வேலாயுதம்பாளையம், புன்னம்சத்திரம் செல்கின்ற சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஏராளமான போலீசார் வருகை புரிந்தனர். சாலை மறியலை கைவிடும்படி போலீசார் கேட்டுக்கொண்டனர். அதற்கு பாஜகவினர் விநாயகரை எங்களிடம் அளித்தால் சாலை மறியலை கைவிடுகிறோம் என்று கூறினர். ஆனால் அதனை கேட்டுக்கொள்ளாத போலீசார் பாஜகவினரை கைது செய்தனர். அது மட்டுமின்றி கூட்டத்தில் இருந்த மூதாட்டியை போலீஸ் எஸ்.ஐ., கீழே தள்ளிவிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source, Image Courtesy: News 18 Tamil