தெருவுக்கு சின்னவர் உதயநிதி பேர் வைங்கோ - கரூர் மாநகராட்சி கவுன்சிலர் வேண்டுகோள்
கரூர் மாநகராட்சியில் ஒரு தெருவிற்கு உதயநிதியின் பயிர் சூட்ட உள்ளதாக தீர்மானம்.
கரூர் மாநகராட்சியில் நேற்று நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் முக்கிய பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அந்த கூட்டத்தின் போது கரூர் மாநகராட்சியில் இடம்பெற்றுள்ள தெரு ஒன்றுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் மகன், அமைச்சர் உதயநிதியின் பெயரை வைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அ.தி.மு.கவினர் மௌனம் காத்து இருக்கிறார்கள்.
தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதியின் பேரரும் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மகனுமான உதயநிதி தி.மு.கவின் முக்கிய பதவியில் இடம் வகிக்குகிறார். சமீபத்தில் அவர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அவர் எம்.எல்.ஏவில் இருந்து தற்பொழுது அமைச்சராக இருக்கிறார்.
இந்த நிலையில், கரூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் 36-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் வசுமதி கரூர் நகராட்சி மாநகராட்சி 36 வது வார்டு மணக்கமலம் தெரு என்ற பதிவேட்டில் உள்ளது. அந்த பெயரை நீக்கிவிட்டு உதயநிதி முதலாம் தெரு, இரண்டாம் தெரு, மூன்றாம் தேர்வு என்ற பெயரில் மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார். இதற்கு 46 கவுன்சிலர்களும் ஆதரவளித்து இருக்கிறார்கள். மேலும் அ.தி.மு.கவின் இரு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்காது, மௌனமாக இருந்தால் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: Dinamalar