காவி உடை திருவள்ளுவர் - தி.மு.கவின் நீலிக்கண்ணீர்!
காவி உடை திருவள்ளுவர் - தி.மு.கவின் நீலிக்கண்ணீர்!
திருவள்ளுவர் தோற்றம் தொடர்பாக தற்பொழுது மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. மயிலாப்பூரில் பிறந்த திருவள்ளுவரின் ஓவியம் பழமையில் நெற்றியில் விபூதி பட்டையுடன், கழுத்தில் மாலையுடன் ஒரு சித்தர் போல் காட்சியளிப்பார்.
ஆனால் இந்து மத அடையாளங்களே இருக்க கூடாது என நினைத்த திராவிட சிந்தனை கொண்ட ஆட்சியாளர்களின் காலத்தில் திருவள்ளுவர் நெற்றியில் இருந்து விபூதி மற்றும் கழுத்தில் இருந்த மாலையை அகற்றிய மாதிரி ஒரு ஓவியத்தை வரைந்து அதனை வெளியிடங்களிலும், பாடபுத்தகத்திலும், ஓவியமாகவும் வெளியிட்டனர்.
இன்னும் சிலரோ ஒருபடி மேலே சென்று திருவள்ளுவர் கிருஸ்தவர் என்றே பொய் பரப்ப துவங்கிவிட்டனர். ஆனால் சில காலம் முன்பு இனி இப்படி விட்டால் திருவள்ளுவரின் மொத்த உருவம் மற்றும் கருத்துக்களை இவர்கள் மொத்தமாக மாற்றி அடுத்த தலைமுறைக்கு வேறு மாதிரி காண்பிக்க துவங்குவர் என்று பா.ஜ.க சார்பில் காவி உடையணிந்த பழைய சித்தர் ரூபத்துடன் இருக்கும் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டனர்.
இதற்கு திராவிட சிந்தனை என இந்து மத வெறுப்பை கொண்ட அரசியல்வாதிகளோ "ஐயோ எங்கள் திருவள்ளுவரை மாற்றிவிட்டனர், ஐயோ தமிழுக்கு இதுதான் கதியா" என நீலிக்கண்ணீர் வடிக்க துவங்கிவிட்டனர்.
ஆனால் இப்படி புலம்புவர்கள் மயிலாப்பூர் முண்டகக்கண்ணி ஆலயம் அருகில் இருக்கும் திருவள்ளுவர் கோவிலுக்கு சென்று ஒரு விளக்கு கூட ஏற்றியிருக்க மாட்டார்கள் ஆனால் அரசியலில் பிழைக்க வேண்டும் என்ற அற்ப காரணத்திற்காக திருவள்ளுவரை தாரை வார்க்க தயாரான கூட்டம் புலம்பி வந்தது.
இது மீண்டும் தலையெடுக்க துவங்கிவிட்டது, அரசு கல்வி தொலைக்காட்சியில் திருவள்ளுவர் தொடர்பான பாடத்தில் திருவள்ளுவர் படம் காவி உடையணிந்து இடம்பெற்றிருப்பதாக மீண்டும் நீலிக்கண்ணீருடன், ஓலக்குரல்களும் ஒலிக்க துவங்கிவிட்டன.