KCC கிசான் கிரடிட் கார்ட் மத்திய அரசின் திட்டம்: பிரதமர் படம் எங்கே? தி.மு.க.வுக்கு வானதி சீனிவாசன் கேள்வி!

Update: 2022-04-23 14:03 GMT

கேசிசி கிசான் கிரடிட் கார்டு லோன் என்பது மத்திய அரசின் திட்டம். தமிழகத்தில் திமுக அரசு தங்களை விளம்பரப்படுத்திக்கொண்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடியின் படம் இடம் பெறவில்லையே என்று பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக அரசு ஒரு நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை ஈரோடு மாவட்டம், உழவர் கடன் அட்டை கேசிசி பெற சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படமும் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

இந்த திட்டத்தை தொடங்கியது மத்திய அரசு. உழவர்களுக்கு மானியம் அளிப்பது மத்திய அரசு மட்டுமே. ஆனால் தமிழகத்தில் அதனை செயல்படுத்த முடியுமே தவிர தங்களின் திட்டம் என்பதை போன்று நோட்டீஸ் அடித்துள்ளனர்.

இது தொடர்பாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: மத்திய அரசின் விளம்பரத்தில் மாநில அரசின் பங்கு பற்றி இல்லை என சட்டப்பேரவையில் பேசிய அறிவாலயம் அமைச்சர்களே, கேசிசி, கிசான் கார்ட் லோன் என்பது மத்திய அரசின் திட்டம், பிரதமர் மோடியின் படம் எங்கே?? முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே என்று குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News