'கிரிக்கெட் கடவுள்' சச்சின் டெண்டுல்கரை அவமதித்த காங்கிரஸ்.!

'கிரிக்கெட் கடவுள்' சச்சின் டெண்டுல்கரை அவமதித்த காங்கிரஸ்.!

Update: 2021-02-06 06:45 GMT

காங்கிரஸ் இளைஞர் அணியை சேர்ந்த உறுப்பினர்களின் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உருவ அட்டை மீது கருப்பு எண்ணையை ஊற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தது கடும் கண்டங்களுக்கு ஆளாகி வருகிறது.  

விவசாயிகள் போராட்டம் எனும் பெயரில், வசதியான இடைத்தரகர்களும், காலிஸ்தானிகளும், இவர்களால் தவறாக வழிநடத்தப்படும் சில விவசாயிகளும் சமீபத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லி எல்லையில் போராடி வருகிறார்கள். 

இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக ட்வீட் செய்ய அமரிக்க பாப் பாடகி ரிஹானாவிற்கு காலிஸ்தானி தீவிரவாத அமைப்புடன் தொடர்பு கொண்ட PR நிறுவனங்கள் மூலம் ரூ .18 கோடி (2.5 மில்லியன் டாலர்கள்) வழங்கப்பட்டது என செய்திகள் வெளியாகியுள்ளன. 

இதற்கு பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கண்டனம் தெரிவித்தார். வெளிநாட்டினர் இந்திய விஷயத்தில் தலையிட தேவையில்லை என்றும், இந்தியாவிற்கான முடிவை இந்தியாவை எடுத்துக் கொள்ளும் என்ற பொருள்படும் அவர் வெளியிட்ட ட்வீட்  வைரலானது. இதைத் தொடர்ந்து பல கிரிக்கெட் வீரர்களும் இதே கருத்தை வலியுறுத்தினர். இந்திய பிரபலங்கள் தக்க பதிலடி கொடுத்ததால் காங்கிரஸ் கட்சி எரிச்சல் அடைந்ததாக தெரிகிறது.

இன்று கேரள காங்கிரஸ் உறுப்பினர்கள், சச்சின் டெண்டுல்கரின் உருவப்படத்திற்கு கருப்பு எண்ணெய் ஊற்றி அவமதித்தனர். வெளிநாட்டினர் இந்திய விவகாரங்களில்  தலையிட வேண்டாம் என்று கூறியதற்கு காங்கிரஸ் கட்சி ஏன் சச்சின் டெண்டுல்கர் மீது இவ்வளவு குரூர கோபத்துடன் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

 ஏனெனில் இதே கேள்வியை ராகுல் காந்தியிடம் கேட்ட போதும் அவர் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று பதிலளித்தார். மற்றொன்று சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கியதும், அவரை ராஜ்ய சபாவிற்கு அனுப்பி வைத்தது காங்கிரஸ் கட்சிதான்.

 கேரள காங்கிரஸ் என அவ்வப்போது இவ்வாறு  நடந்து கொள்வது புதிய விஷயம் அல்ல. ஒரு இளம் கன்று குட்டியை நடுரோட்டில் வெட்டியது உள்ளிட்ட மோசமான விஷயங்களுக்கு பெயர் போனவர்கள். இது சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனக் குரல்களை எழுப்பி வருகிறது.   

Similar News