தெலுங்கானா பா.ஜ.க தலைவராக கிஷன் ரெட்டி
தெலுங்கானா பா.ஜ.க தலைவராக கிஷன் ரெட்டி பொறுப்பேற்றுள்ளார்.;
தெலுங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி அங்கு கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் பா.ஜ.க தீவிரமாக இறங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக கட்சியின் மாநில தலைவராக மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிருஷ்ணன் ரெட்டியை பா.ஜ.க தலைமை கடந்த மாதம் நியமித்தது.
கரீம் நகர் லோக்சபா எம்.பி பண்டி சஞ்சய் குமாருக்கு பதிலாக அவர் நியமிக்கப்பட்டார். தலைவராக நியமிக்கப்பட்டதிலிருந்து கிஷன் ரெட்டி ஹைதராபாத்தில் முகாமிட்டு கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் கிஷன் ரெட்டி நேற்று தெலுங்கானா பா.ஜ.க தலைவர் முன்னதாக அவர் சார்மினாரை ஒட்டிய ஸ்ரீ பாக்யலட்சுமி கோவிலில் பிரார்த்தனை செய்தார்.
SOURCE :DAILY THANTHI