தி.மு.க அரசை விமர்சித்த கிஷோர் கே.சாமிக்கு 5 தேதி வரை நீதிமன்ற காவல்

தி.மு.க அரசை விமர்சித்ததாக கிஷோர்.கே.சுவாமி கைது செய்யப்பட்டு அவருக்கு டிசம்பர் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-22 02:37 GMT

தி.மு.க அரசை விமர்சித்ததாக கிஷோர்.கே.சுவாமி கைது செய்யப்பட்டு அவருக்கு டிசம்பர் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் தொடர்ந்து அரசியல் தொடர்பான பதிவுகளை பதிவிட்டு வருபவர் கிஷோர்.கே.சாமி. தொடர்ச்சியாக தி.மு.க மற்றும் ஆதரவு கட்சிகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.

இந்நிலையில் தி.மு.க'வின் முன்னாள் முதல்வர், பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துக்கள் பதிவிட்டது என மொத்த ஏழு வழக்குகளில் அரசியல் விமர்சகர் கிஷோர்.கே.சாமி கேது செய்யப்பட்டு ஜூன் மாதம் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில் தகாத வார்த்தைகளால் பேசி தனது ட்விட்டர் பதிவில் கிஷோர்.கே.சாமி பதிவிட்டு இருந்தார் எனக்கூறி எழும்பூரை சேர்ந்த இம்ரான் என்பவர் கடந்த மூன்றாம் தேதி மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் அவதூறு பரப்புதல், கலகத்தை தூண்டுதல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகும் படிக்கு கிஷோர் கே.சுவாமிக்கு சமன் அனுப்பினார்.

இந்த நிலையில் நேற்று சாமி புதுச்சேரியில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கிஷோரை கைது செய்தனர். மேலும் அவருக்கு டிசம்பர் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.


Source - Dinamani

Similar News