'கனிமொழி வெறும் பேச்சு மட்டும்தான், காவியை பார்த்தால் பயம்' - உமா ஆனந்தன் அதிரடி
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும், ஹெச்.ராஜாவும் எத்தனை நாட்கள் கேள்வி கேட்கிறாங்களே, எதற்காவது இதுவரையில் பதில் வந்திருக்கா? இதுதான் உங்க திராவிட மாடலா என்று சென்னை மாநகராட்சியின் கவுன்சிலர் உமா ஆனந்தன் சரமாரி தி.மு.க. அரசை பார்த்து விமர்சித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளூவர் கோட்டத்தில் மாநில தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
அதில் கலந்து கொண்ட சென்னை மாநகராட்சி, மாம்பலம் கவுன்சிலர் உமா ஆனந்தன் பேசியதாவது: கடந்த 1967ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது நான் 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு ஊர்வலம் நடைபெற்றது. கோடம்பாக்கத்தில் அம்பேத்கர் சிலை இருக்கே அங்கேதான் அந்த ஊர்வலம் நடந்து முடிந்தது. அப்போதுதான் அவர்களின் பேச்சை முதல் முறையாக கேட்டேன். அடுக்கு மொழியை கேட்டேன். அப்போது முதல் தற்போது வரையில் அவர்களின் அஸ்திவாரம் அடுக்கு மொழியும், பொய்யான பேச்சு மட்டுமே உள்ளது.
சினிமாவுக்கு வசனம் எழுதி அந்த வசனத்தை வைத்து மக்களிடம் எடுத்து சென்று ஆட்சியை பிடித்தனர். சொல்லப்போனால் பிராக்டிக்கலா எதுவுமே யோசிக்கிறது இல்லை.. மேலும், அரசியலில் அநாகரீகத்தை கொண்டு வந்தவர்கள் திராவிட கட்சிக்காரர்கள்தான். தற்போது வள்ளூவர் கோட்டத்தை கலைஞர் கட்டினார் என்று சொல்கிறார்கள். கலைஞர் எந்த கல்லூரியில் இன்ஜிஜியரிங் படித்து இங்க வந்து வள்ளூவர் கோட்டத்தை கட்டினார் என்பது தெரியவில்லை. முரண்பாடுகளின் மொத்த அம்சமே இந்த தி.மு.க.தான்.