கொளத்தூர் தொகுதி தேர்தல் அதிகாரி திடீர் மாற்றம்

இதனிடையே சென்னையில் உள்ள கொளத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரி தங்கவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2021-05-02 02:35 GMT

கொளத்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி தங்கவேலுவுக்கு கொரோனா தொற்று காரணமாக அவருக்கு பதில் கண்ணன் என்ற அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 2) நடைபெறுகிறது.

இதனிடையே சென்னையில் உள்ள கொளத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரி தங்கவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனை தொடர்ந்து கண்ணன் என்ற தேர்தல் நடத்தும் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News