புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டி: வேட்பாளர்களை அறிவித்த கிருஷ்ணசாமி.!
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக புதிய தமிழகம் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதனை தொடர்ந்து தனித்து போட்டியிடவும் கிருஷ்ணசாமி வேட்பாளர்களை அறிவித்து வருகின்றார்.

அதிமுக கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சி சமீபத்தில் வெளியேறியது. இதனை தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் தனித்து போட்டியிடுகிறது. இதற்காக முதற்கட்டமாக 60 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டப்பிடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் பல முனை போட்டி நிலவுகிறது. குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி, தோல்வி நிர்ணயம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.