'சத்யமூர்த்திபவன் சட்டையை கிழித்துக்கொண்டு நிற்க கே.எஸ்.அழகிரியே காரணம் அவரை தூக்க வேண்டும்' - டெல்லியில் புகாரோடு நிற்கும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள்

கே.எஸ்.அழகிரியை தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என டெல்லியில் புகார் மனுவோடு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முகாமிட்டு உள்ளனர்.

Update: 2022-11-22 02:34 GMT

கே.எஸ்.அழகிரியை தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என டெல்லியில் புகார் மனுவோடு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முகாமிட்டு உள்ளனர்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் மோதிக் கொண்ட நிலையில் இதற்கு காரணமான மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியை தலைமை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என டெல்லி தலைமையை சந்தித்து தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டு அடித்துக் கொண்டனர். மேலும் ரத்தம் வர வர ஒருத்தரை ஒருவர் தாக்கி கொண்டதால் காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி மோதல் உருவெடுத்தது.

இந்நிலையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியை நீக்க கோரி தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் தங்கபாலு, இ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனேவை சந்தித்து புகார் மனு அளித்ததாகவும் அந்த மனுவில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.


Source - Asianet News 

Similar News